வீடு / சமையல் குறிப்பு / மஞ்ச சோறு(நாகர்கோயில்)

Photo of Yellow rice by Benazer Abdul Kader at BetterButter
548
1
0.0(0)
0

மஞ்ச சோறு(நாகர்கோயில்)

Oct-04-2018
Benazer Abdul Kader
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஞ்ச சோறு(நாகர்கோயில்) செய்முறை பற்றி

நாகர்கோயில் சாப்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய். இந்த உணவு பொதுவாக எங்கள் வீடுகளில் சுற்றுலா செல்லும்போது கட்டும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொன்னி அரிசி ஒரு கப்
  2. தேங்காய் அரை கப்
  3. தண்ணீர் 3 கப்
  4. சாம்பார் வெங்காயம் 6
  5. பட்டை சிறு துண்டு
  6. மல்லி விதை கால் டீஸ்பூன்
  7. சோம்பு கால் டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  9. கிராம்பு-3
  10. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  11. உப்பு தேவையான அளவு
  12. தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் தேங்காய், 3 சாம்பார் வெங்காயம், பட்டை, மல்லிவிதை, சோம்பு ஆகியவற்றை வாசனை வரும் வரை வதக்கவும்.
  2. சூடு ஆறியதும் தண்ணீர் சேர்த்து வடிய அரைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கிராம்பு, கருவேப்பிலை வதக்கி அதனுடன் சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும், 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  6. தண்ணீர் கொதித்தவுடன் அதில் அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்
  7. சுவையான மஞ்சள் சோறு ரெடி
  8. இதனை இறைச்சி வரட்டியது மற்றும் தோல் நீக்கிய சிறுபயறு குழம்புடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
  9. அவித்த முட்டையுடன் உண்ணலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்