வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கொத்துக் கறி(காயல் ஸ்பெஷல்)

Photo of Minced Mutton Curry (Kayal Special) by Nafeesa Thahira at BetterButter
624
2
0.0(0)
0

மட்டன் கொத்துக் கறி(காயல் ஸ்பெஷல்)

Oct-05-2018
Nafeesa Thahira
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கொத்துக் கறி(காயல் ஸ்பெஷல்) செய்முறை பற்றி

கொத்துக் கறி ஊரில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சைட் டிஷ். கொத்துக் கறி சமைப்பதற்கு என்று கேட்டு வாங்கினால் அதற்கேற்ப கறியை கொத்தி கொடுப்பார்கள்..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஈத்
  • இந்திய
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் ½ கிலோ
  2. தேங்காய் எண்ணெய் 100 மில்லி
  3. கடலைப் பருப்பு ¼ கிலோ
  4. கேரட் 50 கிராம்
  5. உருளைக் கிழங்கு 50 கிராம்
  6. தக்காளி 100 கிராம்
  7. தேங்காய் பால் மாவு 25 கிராம்
  8. தயிர் 4 மேசைக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு 2 மேசைக்கரண்டி
  10. பட்டை 2 துண்டு
  11. கிராம்பு 2 எண்ணம்
  12. கறிவேப்பிலை தேவைக்கேற்ப
  13. கொத்தமல்லி இலை தேவைக்கேற்ப
  14. காயல் வத்தல் தூள் 3 மேசைக்கரண்டி
  15. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கறியை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடலை பருப்பை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
  3. கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை வெட்டி வைக்கவும்
  4. தாளிப்பு பொருட்கள் தயிர், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு தனியாக எடுத்து வைக்கவும்
  5. இவ்வாறு கொத்துக் கறி சமைப்பதற்கு தேவையான பொருட்களை தயாரான நிலையில் வைத்துக் கொள்ளவும்
  6. தாளிப்பு பொருட்களை தவிர்த்து மீத பொருட்களை ஒன்றாக சேர்த்து அத்துடன் மிளகாய் தூள்,உப்பு மற்றும் தேங்காய் பால் மாவு சேர்த்து வைக்கவும்
  7. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளவும்
  8. குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அத்துடன் தாளிக்க வைத்துள்ள பொருட்களை சேர்த்து பொறிய விடவும்
  9. தாளிப்பு பொறிந்ததும் கறி, காய்கறி மற்றும் பருப்பு சேர்த்து வைத்ததை குக்கரில் தட்டி விடவும்
  10. தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி இலை சேர்த்து 5 விஸில் அடிக்க விடவும்.
  11. இதோ காயல் ஸ்பெஷல் மட்டன் கொத்து கறி ரெடி...!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்