வீடு / சமையல் குறிப்பு / கடம்பூர் போளி

Photo of Kadapmbur Poli by Fathima Sujitha at BetterButter
375
0
0.0(0)
0

கடம்பூர் போளி

Oct-06-2018
Fathima Sujitha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடம்பூர் போளி செய்முறை பற்றி

மைதா மேல் மாவாகவும் ,உள்ளே பூரணம் தாயாரித்து வைத்து பரத்தி சூட்டெடுக்கும் ஓர் உணவு ...கடம்பூரில் அதிகமாக பிரபலமானது...மிருதுவாக இருக்கும் கடம்பூர் போளி...!!

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு - 1 கப்
  2. மஞ்சள் தூள் - சிறிதளவு
  3. தண்ணீர் - தேவைக்கு
  4. உப்பு - தே.அ
  5. எண்ணெய் - தே.அ
  6. ஸ்டப்பிங் செய்ய :
  7. கடலைப் பருப்பு - 1/2 கப்
  8. வெல்லம் - 1/4 கப்
  9. ஏலக்காய் தூள் - சிறிதளவு
  10. நெய் - சுட்டெடுக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள், உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. ரொம்ப கெட்டியாக இல்லாமல் மாவு பதம் தளர்த்தியாக இருக்க வேண்டும்.
  3. மேலே எண்ணெய் ஊற்றி பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. எவ்ளோ மாவு ஊறுகிறதோ அது தான் போளியின் ருசியே ...!!
  5. ஸ்டப்பிங் செய்ய கடலைப்பருப்பினை நீர் ஊற்றி 3/4 பதம் வேகவைத்து நீரை நன்கு வடிக்கவும்.
  6. ஆறியதும் மிகஸியில் பவுடராக பொடிக்கவும்.
  7. வெல்லத்தில் சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  8. சிறிதளவு வெல்ல நீரை தண்ணீரில் ஊற்றினால் உருட்டம் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.
  9. பாகு வந்ததும் ஏலக்காய்த்தூள் பொடித்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்கவும்.
  10. ஊறிய மைதா மாவில் சிறிய உருண்டை அளவு எடுத்து சிறிதளவு கையாலே விரித்து போளி உருண்டையை உள்ளே வைத்து உருட்டவும்.
  11. எண்ணெய் தொட்டு சிறிய வட்டமாக கைககளாலே மெலிதாக பரத்தி எடுக்கவும்.
  12. தோசைகல்லில் நெய் ஊற்றி இரு புறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
  13. மிருதுவான கடம்பூர் போளி தயார் ...சுடாக பரிமாறவும்..!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்