Home / Recipes / Kara poli

Photo of Kara poli by Krishnasamy Vidya Valli at BetterButter
1110
6
0.0(0)
0

Kara poli

Jan-07-2018
Krishnasamy Vidya Valli
140 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 10

  1. பூரணம் செய்வதற்கு தேவையானவை
  2. உருளைக்கிழங்கு - 2
  3. வெங்காயம் - 2
  4. பச்ச மிளகாய் - 2
  5. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  6. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  7. உப்பு - 3/4 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  10. கரம்மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  11. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  12. கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  14. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  15. மாவிற்கு தேவையானவை
  16. கோதுமை மாவு - 3/4 கப்
  17. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  18. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  19. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  20. போளி வாட்டி எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்
  2. தளற பிசைந்து வைத்து அதன் மேல் எண்ணெய் விட்டு அப்படியே இரண்டு மணி நேரம் வைக்கவும்
  3. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும் வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் பச்ச மிளகாய் கொத்தமல்லி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பச்ச மிளகாய் தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. மசித்த உருளைகிழங்கு போட்டு மஞ்சள் பொடி உப்பு தனியா பொடி கரம் மசாலா காரப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
  6. கொத்தமல்லி இலை தூவி நன்றாக மசித்து பிசைந்து வைக்கவும்
  7. மசாலாவை பத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும் அதேபோல் மாவையும் பத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  8. பேக்கிங் பேப்பர்/பாலிதீன்பேப்பர்/வாழைஇலையில் மாவு வைத்து சப்பாத்தி போல் கையால்நன்கு தட்டிக்கொள்ளவும்
  9. அதன் மேல் உருளைகிழங்கு மசாலா உருண்டை வைத்து மாவை வைத்து மூடவும்
  10. கையால் மறுபடியும் நன்றாக தட்டிக்கொள்ளவும்
  11. தோசைகல்லில் போட்டு எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  12. அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும். அருமையான கார போளி ரெடி . ஸண்டே ஈவினிங்கிற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. இனிப்பு போளி செய்யும் நாளன்றே கூட இந்த காரபோளியும் செய்து அசத்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE