வீடு / சமையல் குறிப்பு / கல்யாண கறிக்குழம்பு

Photo of Kalyana Curry Kulambu by Nazeema Banu at BetterButter
637
2
0.0(0)
0

கல்யாண கறிக்குழம்பு

Oct-06-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கல்யாண கறிக்குழம்பு செய்முறை பற்றி

முகவை மாவட்ட கீழக்கரையில் கல்யாணத்தில் நெய் சோற்றுக்கு சைட் டிஷ்ஷாக இந்த கறிக்குழம்பு செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் இளங்கறி அரை கிலோ
  2. உ.கிழங்கு கால் கிலோ
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு குழி கரண்டி
  4. பெ.வெங்காயம் 2
  5. தக்காளி 2
  6. தேங்காய் அரை மூடி
  7. மி.தூள் சிறிது
  8. ம.தூள் சிறிது
  9. உப்பு தே.அளவு
  10. கீழை மசாலா இரண்டு டே.ஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. புதினா மல்லி சிறிது
  13. எண்ணெய் தே.அளவு
  14. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
  2. அதில் வெங்காயம்.பமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மி.தூள்.ம.தூள்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
  4. கறியை சுத்தம் செய்து வைக்கவும்.
  5. இஞ்சி பூண்டு இலேசாய் வதங்கியதும் கறியை சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.
  6. கறியுடன் சேர்த்து நன்கு கிளறி இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரை நான்கு விசில் வைத்து வேக விடவும்.
  7. தேங்காயை அரை கப் தண்ணீர் விட்டு அரைத்து திக்கான பால் அரை கப் பால் எடுத்து தனியே வைக்கவும்.
  8. குக்கரை திறந்து உ.கிழங்கு மற்றும் கீழை மசாலா சேர்த்து கலந்து விட்டு வேக விடவும்.
  9. கிழங்கு வெந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  10. கறியும் கிழங்கும் நன்கு வெந்து மேலே எண்ணெய் விடும் நேரம் திக்கான தே.பாலை ஊற்றி மீண்டும் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  11. குக்கரில் இருந்து கறிக்குழம்பை ஒரு பவுலுக்கு மாற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்