வீடு / சமையல் குறிப்பு / தஞ்சை டாங்கர் பச்சடி

Photo of Tanjai dankar pachidi by Lakshmi Priya at BetterButter
364
1
0.0(0)
0

தஞ்சை டாங்கர் பச்சடி

Oct-07-2018
Lakshmi Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தஞ்சை டாங்கர் பச்சடி செய்முறை பற்றி

வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ஒரு வாணலியில் கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து அதில் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவேண்டும் வதங்கியவுடன் ஒரு கப்பில் தயிர் உப்பு கலந்து வறுத்து அரைத்த உளுத்தம் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து அதில் இந்த கலவையை போட்டு கிளற வேண்டும் டாங்கர் பச்சடி தயார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டக்காய் 10
  2. தயிர் ஒரு கப்
  3. உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்
  4. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கொத்தமல்லி தேவையான அளவு
  7. மாதுளை முத்துக்கள்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை அலம்பிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வற்றல் தாளித்து நறுக்கிய வெண்டைக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
  3. மற்றொரு கடாயில் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்க வேண்டும்
  4. வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸியில் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும்
  5. ஒரு கப்பில் தயிர் வெண்டைக்காய் கலவை உப்பு கொத்தமல்லி மற்றும் உளுத்தம் பொடி சேர்த்து கலக்கவும்
  6. ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு பொடி போதுமானது
  7. மாதுளை முத்துக்களையும் சேர்க்கவும்
  8. டாங்கர் பச்சடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்