வீடு / சமையல் குறிப்பு / முத்துப்பேட்டை ஆப்பம் தேங்காய் தொட்டுகறி

Photo of Muthupettai aapam thengai thottukari by Yasmin Shabira at BetterButter
379
1
5.0(0)
0

முத்துப்பேட்டை ஆப்பம் தேங்காய் தொட்டுகறி

Oct-07-2018
Yasmin Shabira
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முத்துப்பேட்டை ஆப்பம் தேங்காய் தொட்டுகறி செய்முறை பற்றி

இது எங்கள் ஊரில் பிரபலமான சத்தான காலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி : 1 1/2 கப்
  2. சாதம் : 1 கப்
  3. தேங்காய் : 1
  4. வெள்ளை உளுந்து : 2 தேக்கரண்டி
  5. வெந்தயம் : 1/2 தேக்கரண்டி (optional)
  6. உப்பு : 1 மேசைக்கரண்டி அளவு
  7. சமையல் சோடா : 2 சிட்டிகை
  8. தொட்டுகறி செய்ய தேவையானவை::::
  9. தேங்காய் : 1 கப்
  10. பொட்டுக்கடலை : 1/2 கப்
  11. சின்ன வெங்காயம் : 5-6
  12. பச்சை மிளகாய் : 1
  13. சிவப்பு மிளகாய் : 2
  14. உப்பு : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை வெந்தயம் மற்றும் உளுந்தை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்
  2. Method 1::: மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பச்சரிசி வெந்தயம் உளுந்துடன் சாதம் மற்றும் துறுவிய தேங்காய் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக மைய அரைக்கவும்... சிறிதும் கொரகொரப்பாக இருக்க கூடாது..
  3. அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 6 மணி நேரம் நன்றாக புளிக்க விடவும்...
  4. Method 2:::: ஊற வைத்த பச்சரிசி உளுந்து மற்றும் வெந்தயத்துடன் சாதம் சேர்த்து நன்றாக மைய அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க விடவும்...
  5. ஆப்பம் சுடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் தேங்காய் பால் பிழிந்து மாவில் சேர்த்து கலக்கி கொள்ளவும்..
  6. ஆப்பம் சுடும் போது மாவில் சமையல் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்..
  7. ஆப்ப மாவு இட்லி மாவு போல் கெட்டியாக இருக்க கூடாது... மாவு தண்ணீயாக இருந்தால் தான் ஆப்பம் மிருதுவாக இருக்கும்...
  8. ஆப்பம் ஊற்றும்போது ஆப்ப சட்டி அதிக சூடாக இருக்க கூடாது...
  9. தொட்டுகறி:::
  10. மிக்சி ஜாரில் துறுவிய தேங்காய் பொட்டுக்கடலை சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்
  11. நன்றாக அரைந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 சுற்று சுற்றி நவட்டிக்கொள்ளவும்..
  12. அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆப்பம் தேங்காய் தொட்டுகறி தயார்...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்