Photo of Jeera Poori. by Nazeema Banu at BetterButter
293
0
0.0(0)
0

ஜீரா பூரி

Oct-09-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஜீரா பூரி செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையின் ஸ்பெஷல் தின்பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா அரை கிலோ
  2. டால்டா 50கிராம்
  3. உப்பு அரை ஸ்பூன்
  4. சீனி 1கிலோ
  5. எண்ணெய் அரை லி
  6. கால் ஸ்பூன் பேக்கிங் சோடா

வழிமுறைகள்

  1. மைதாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் கொட்டி உப்பு .சோடாவை சேர்த்து கலக்கவும்.
  2. அதில் டால்டாவை சேர்த்து பிசிறவும்.
  3. இலேசாய் தண்ணீர் தெளித்து பூரி மாவு போல இறுக்கமாக பிசையவும்.
  4. அரை மணி ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  5. சர்க்கரையுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  6. சர்க்கரை கரைந்து கொதித்து திக்கான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
  7. ஒரு கடாயில் அரை லி எண்ணெய் ஊற்றவும்.
  8. மாவை மீண்டும் அழுத்திபிசைந்து எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து மாவைத்தூவி நல்ல அகலமாக மெல்லியதாக தேய்க்கவும்.
  9. மேலே எண்ணெய் தடவி சுருட்டி மீண்டும் தேய்க்கவும்.
  10. மெல்லியதாக தேய்த்து எண்ணெயில் ஒவ்வொன்றாக பொரிக்கவும்.
  11. இரு புறமும் பொன்னிறமாய் பொரிய விடவும்.
  12. மொத்த பூரிகளையும் ஒருதட்டில் அடுக்கி திக்கான பாகை எல்லா பூரியிலும் படுமாறு சுற்றி ஊற்றி ஆற விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்