வீடு / சமையல் குறிப்பு / தூத்துக்குடி மக்ரூன்

Photo of Tuticorin Macaroon by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1226
2
5.0(0)
0

தூத்துக்குடி மக்ரூன்

Oct-09-2018
Wajithajasmine Raja mohamed sait
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தூத்துக்குடி மக்ரூன் செய்முறை பற்றி

தூத்துக்குடி மக்ரூன்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை -2 வெள்ளைக்கரு மட்டும்
  2. ப்ரவுன் சுகர் - 1/2 கப் பொடித்தது
  3. முந்திரி -1/2 கப் பொடித்தது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. ஓவனை 100்C ல் ஃப்ரீ கீட் செய்து கொள்ளவும்.
  3. முதலில் முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்துக்கொள்ளவும்.
  4. வெள்ளைக்கருவை ஒரு விஸ்க் வைத்து நன்கு அடித்துக்கொள்ளவும்.அதனுடன் பொடித்த சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு விஸ்கினால் அடித்துக்கொள்ளவேண்டும்.
  5. குறைந்தது 20-25 நிமிடங்கள் கையினால் விஸ்க் வைத்து நன்கு முட்டை வெள்ளைக்கரு சீனி கலவை கெட்டியாகும் வரை அடித்துக்கொள்ளவும்.
  6. முட்டை கலவை நன்கு கெட்டியானதும் அதற்கு மேல் விஸ்க் செய்யாமல் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் முட்டை கலவை தண்ணீர் விட்டது போல் ஆகி விடும். அது மக்ரூன் செய்ய சரியாக வராது .
  7. கெட்டியாக அடித்து வைத்துள்ள முட்டை சீனி கலவையுடன் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.
  8. பொடித்த முந்திரியை சேர்ந்தவுடன் இலேசாக கிளறி எடுத்துக்கொள்ளவும். அதிக நேரம் கிளறக்கூடாது.
  9. பின்பு இதை முக்கோணமாக செய்த பட்டர் பேப்பர் அல்லது ஒரு பாலித்தீன் பையில் சேர்த்து கத்திரியால் ஒரு ஓரத்தில் கட் செய்து கொள்ளவும்.
  10. இப்பொழுது ஒரு பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் மக்ரூன் வடிவில் பிழியவும்.
  11. ஃப்ரீ கீட் செய்த ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து 100்C ல் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  12. 1.15 மணிநேரம் கழித்து ட்ரேயை ஓவனில் இருந்து எடுத்து நன்கு சூடு ஆறவிடவும்.
  13. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான மக்ரூன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்