வீடு / சமையல் குறிப்பு / கோவை காளான் மசாலா

Photo of Kovai Kaalan Masala(street style) by Menaga Sathia at BetterButter
802
0
0.0(0)
0

கோவை காளான் மசாலா

Oct-09-2018
Menaga Sathia
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோவை காளான் மசாலா செய்முறை பற்றி

கோவை ரோட்டோர கடையில் இந்த காளான் மசாலா மிக பிரசித்தி பெற்றது.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளான் -1/4 கிலோ
  2. எண்ணெய்-பொரிக்க
  3. பாகம் -1:ஸ்டாக் செய்ய
  4. எண்ணெய் -1 டீஸ்பூன்
  5. வெங்காயம்-1,நறுக்கியது
  6. இஞ்சி -1/2 துண்டு
  7. பூண்டுப்பல் -2
  8. பிரியாணி இலை -1
  9. கிராம்பு -2
  10. ஏலக்காய் -2
  11. பட்டை -1/2 அங்குலத்துண்டு
  12. தனியா -1 டீஸ்பூன்
  13. மிளகு,சீரகம்,சோம்பு-தலா 1/4 டீஸ்பூன்
  14. ஜாதிக்காய் பொடி -1/8 டீஸ்பூன்
  15. ஜாதிபத்திரி -1 இதழ்
  16. நீர் -4 கப்
  17. பாகம் -2,காளான் பொரிக்க
  18. இஞ்சிபூண்டு விழுது -1 டீஸ்பூன்
  19. சோளமாவு -3 டேபிள்ஸ்பூன்
  20. மைதா -2 டேபிள்ஸ்பூன்
  21. உப்பு -தேவைக்கு
  22. வரமிளகாய்தூள் -1 டேபிள்ஸ்பூன்
  23. மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன்
  24. கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
  25. எலுமிச்சைசாறு-1/2 டேபிள்ஸ்பூன்
  26. பாகம் 3:
  27. வெங்காயம் -1,நறுக்கியது
  28. பச்சைமிளகாய் -1,நறுக்கியது
  29. வரமிளகாய்தூள்-1 டீஸ்பூன்
  30. கரம்மசாலா-1/8 டீஸ்பூன்
  31. உப்பு -தேவைக்கு
  32. அலங்கரிக்க:
  33. வெங்காயம் -1,பொடியாக நறுக்கியது
  34. எலுமிச்சை துண்டுகள் - தேவைக்கு
  35. கொத்தமல்லிதழை -சிறிதளவு, பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. பாகம் 1ல் கொடுக்கப்பட்ட பொருட்களை பாத்திரத்தில் சேர்த்து 2கப் வரும் வரை கொதிக்கவைத்து வடிகட்டவும்.
  2. காளானை கழுவி,நன்கு ஈரம் போக துடைத்து 4ஆக வெட்டி,பாகம் 2ல் கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து,சிறிது நீர் தெளித்து பிசறி வைக்கவும்.
  3. பின் எண்ணெயை காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  4. ஒரு கடாயில் 1 கப் ஸ்டாக்,பொரித்த காளான் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. நீர் நன்கு சுண்டி வரும் போது மீதமுள்ள ஸ்டாக், பாகம் 3ல் கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்க்கவும்.
  6. நன்கு கிளறி கெட்டியாக வரும் போது அடுப்பை அணைக்கவும்.ஆறியதும் கெட்டியாகிவிடும்.அதனால் கொஞ்சம் தளர இருக்கும்போது இறக்கவும்.
  7. பின் சூடாக அலங்கரிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்