வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கொண்டைக்கடலை குருமா

Photo of Snake gourd chickpea kuruma by Fathima Beevi at BetterButter
442
1
0.0(0)
0

புடலங்காய் கொண்டைக்கடலை குருமா

Oct-20-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கொண்டைக்கடலை குருமா செய்முறை பற்றி

புடலங்காய் கொண்டைக்கடலை குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொண்டைக்கடலை-50 கிராம்
  2. புடலங்காய்-1/2
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  6. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  7. பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  9. மிளகாய் தூள்-1 டீ ஸ்பூன்
  10. மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
  11. பெருங் காயத்தூள்-ஒரு சிட்டிகை
  12. உப்பு- தேவையான அளவு
  13. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  14. துருவிய தேங்காய்- 3 டேபிள் ஸ்பூன்
  15. இஞ்சி- 1/2 இன்ச்
  16. பூண்டுபற்கள்- 7
  17. பட்டை- 1 இன்ச்
  18. கிராம்பு-2
  19. ஏலக்காய்-2
  20. சீரகம்-1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. பின்பு கொண்டைக்கடலையை சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. மசாலா விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
  5. குக்கர் விசில் அடங்கியதும், கொண்டைக்கடலையை மட்டும் எடுத்து வைக்கவும்.
  6. புடலங்காயை தோல் சீவி விதைகளை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
  7. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  9. பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் பெருங் காயத்தூள், உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.
  10. பின்பு நறுக்கிய புடலங்காய், வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  11. விசில் அடங்கியதும் சூடான சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்