வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பச்சடி

Photo of Bitter gourd pachadi by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
542
2
5.0(0)
0

பாகற்காய் பச்சடி

Oct-23-2018
Wajithajasmine Raja mohamed sait
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பச்சடி செய்முறை பற்றி

பாகற்காய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் -1 (150 கிராம்)
  2. தயிர் -1 கப்
  3. பச்சை மிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  4. அரைக்க :
  5. தேங்காய் -1/2 கப்
  6. கடுகு - 1/2 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் -1
  9. தாளிக்க :
  10. கடுகு -1/2 தேக்கரண்டி
  11. வரமிளகாய் -1
  12. கருவேப்பிலை - சிறிதளவு
  13. எண்ணெய் -தேவையான அளவு
  14. உப்பு -தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாகற்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் ,1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பாகற்காய் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  4. மிக்சியில் தேங்காய்,பச்சை மிளகாய்,கடுகு,சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது அரைத்த விழுதை பாகற்காயுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  6. தேங்காய் விழுது பாகற்காயுடன் நன்கு வதங்கி ட்ரையாக வரும்.
  7. இதனுடன் 1கப் தயிர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வரமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  9. பின்பு இதை பாகற்காய் தயிருடன் சேர்க்கவும்.சுவையான பாகற்காய் தயிர் பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்