வீடு / சமையல் குறிப்பு / சுரக்காய் கொழுக்கட்டை

Photo of BOTTLE GOURD MODAK by Kalai Rajesh at BetterButter
565
2
0.0(0)
0

சுரக்காய் கொழுக்கட்டை

Oct-23-2018
Kalai Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரக்காய் கொழுக்கட்டை செய்முறை பற்றி

சுரைக்காய் அதிக மருத்துவ குணம் கொண்டது. இதனை குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது கொடுப்பது அவசியம் , ஆனால் பொரியலாகவோ இல்லை குழம்பில் சேர்த்து கொடுத்தாலோ குழந்தைகள் எடுத்துக்கொள்வதில்லை . இதோ இதை போல் செய்து பாருங்கள் சுரைக்காய் இருப்பது தெரியாமலே இதனை சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ஸ்டீமிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துருவிய சுரைக்காய் ஒரு கப்
  2. கரகரப்பாக பொடித்த பச்சரிசி மாவு ஒரு கப் (அல்லது இடியாப்பம் மாவு)
  3. உப்பு தேவையான அளவு
  4. தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. கடுகு கால் டீஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய தேங்காய் 2 மேசைகரண்டி
  10. கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சுரக்காயை கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும்
  2. துருவிய சுரைக்காய்
  3. கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்
  4. வதக்கிய பின் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
  5. கடலைப்பருப்பு பொன்னிறமாக மாறியதும் துருவிய சுரைக்காய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்
  6. பிறகு இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்க்கவும்
  7. உப்பு கொஞ்சம் தூக்கலாகவே சேர்க்கவும்
  8. தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், நரருக்கிய தேங்காய் மற்றும் பச்சரிசி மாவை போட்டு கிளறவும் . கெட்டியாக வந்ததும் இறக்கி கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். மாவு மிதமான சூட்டில் இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்.
  9. கெட்டியான மாவு
  10. என் மகனுக்காக சிறிது மாவை பொம்மை வடிவத்தில் வெட்டி எடுத்தேன்
  11. இது காலை டிபனுக்கு அல்லது மாலை சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது
  12. தேவைப்பட்டால் வர மிளகாய்க்கு பதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்
  13. நான் என் மகனுக்கு பிடிக்காது என்பதால் கடலைப்பருப்பை தவிர்த்து விட்டேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்