வீடு / சமையல் குறிப்பு / 6 காய்கறி விருந்து

Photo of 6 gourd veggies feast by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

6 காய்கறி விருந்து

Oct-23-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

6 காய்கறி விருந்து செய்முறை பற்றி

விருந்து

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • ప్రెజర్ కుక్
 • ఉడికించాలి
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. 1. பூசணி அல்வா: வெள்ளை பூசணி 1 கீற்று
 2. சர்க்கரை 1/3 கப்
 3. நெய் 6 ஸ்பூன்
 4. முந்திரி 6-10
 5. கேசரி பவுடர் சிறிது (அ) குங்குமப்பூ
 6. 2. பீர்க்கங்காய் 65: பீர்க்கங்காய் 1
 7. சோளமாவு 4 ஸ்பூன்
 8. மைதா 1 ஸ்பூன்
 9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 10. உப்பு தேவையான அளவு
 11. எண்ணெய் பொரிக்க
 12. 3.பாகற்காய் சிப்ஸ்: பாகற்காய் 1
 13. உப்பு தேவையான அளவு
 14. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
 15. எண்ணெய் பொரிக்க
 16. 4.பீர்க்கங்காய் மஞ்சூரியன்: பீர்க்கங்காய் 1
 17. சோளமாவு 4 ஸ்பூன்
 18. மைதா 1 ஸ்பூன்
 19. உப்பு தேவையான அளவு
 20. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 21. எண்ணெய் பொரிக்க
 22. வெங்காயம் 1
 23. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
 24. பச்சை மிளகாய் 1
 25. சோயா சாஸ் 1 ஸ்பூன்
 26. சில்லி சாஸ் 1 ஸ்பூன்
 27. தக்காளி சாஸ் 3 ஸ்பூன்
 28. உப்பு தேவையான அளவு
 29. 5. பரங்கிக்காய் ஃபிரைட் ரைஸ்: எண்ணெய் 2 ஸ்பூன்
 30. கடுகு 1/4 ஸ்பூன்
 31. வெங்காயம் 1
 32. கருவேப்பிலை சிறிது
 33. பரங்கிக்காய் 1 கீற்று
 34. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 35. சாதம் 1 கப்
 36. உப்பு தேவையான அளவு
 37. கரம் மசாலா 1 ஸ்பூன்
 38. 6. பீர்க்கங்காய் பிரியாணி: எண்ணெய் 2 ஸ்பூன்
 39. பட்டை 1
 40. கிராம்பு 1
 41. பிரியாணி இலை 1
 42. அன்னாசி பூ 1
 43. ஏலக்காய் 1
 44. வெங்காயம் 1
 45. கருவேப்பிலை சிறிது
 46. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
 47. தக்காளி 1
 48. பீர்க்கங்காய் 1
 49. அரிசி 1 கப்
 50. உப்பு தேவையான அளவு
 51. 7.புடலங்காய் நூடுல்ஸ்: நூடுல்ஸ் 1 கப்
 52. எண்ணெய் 3 ஸ்பூன்
 53. வெங்காயம் 1
 54. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
 55. முட்டை 1
 56. ( புடலங்காய் 1
 57. சோளமாவு 3 ஸ்பூன்
 58. மைதா 1 ஸ்பூன்
 59. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்)
 60. கரம் மசாலா 1 ஸ்பூன்
 61. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
 62. உப்பு தேவையான அளவு
 63. 8.சுரைக்காய் சாக்கோ பாயாசம்: சுரைக்காய் 1
 64. சேமியா 1/2 கப்
 65. பால் 2-3 கப்
 66. சர்க்கரை 1/4 கப்
 67. கொக்கோ பவுடர் 1 1/2 ஸ்பூன்
 68. நெய் 2 ஸ்பூன்
 69. முந்திரி 5-10
 70. பாதாம் அலங்காரிக்க

வழிமுறைகள்

 1. 1. பூசணி அல்வா: பூசணிக்காயை துருவி கொள்ளவும்.
 2. அடுப்பில் வாணலியை வைத்து அதில் பூசணிக்காயை வேக வைக்கவும்.பூசணிக்காயில் உள்ள தண்ணீரிலே காய் வெந்துவிடும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.
 3. சர்க்கரை சேர்த்து கிளறவும்.
 4. சர்க்கரை கரைந்ததும் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.
 5. நெய் சேர்த்து கிளறவும்.
 6. மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்.
 7. வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்.நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
 8. பூசணி அல்வா தயார்
 9. 2. பீர்க்கங்காய் 65: பீர்க்கங்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.
 10. பீர்க்கங்காயுடன் சோள மாவு மைதா மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்.
 11. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
 12. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 13. நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 14. பீர்க்கங்காய் 65 தயார்.
 15. 3.பாகற்காய் சிப்ஸ்: பாகற்காயை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி கொள்ளவும்.
 16. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு பொரித்து எடுக்கவும்.
 17. உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
 18. பாகற்காய் சிப்ஸ் தயார்.
 19. 4.பீர்க்கங்காய் மஞ்சூரியன்: பீர்க்கங்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும். பீர்க்கங்காய் துருவலை பிழிந்து சாறை எடுத்து கொள்ளவும்.
 20. பீர்க்கங்காயுடன் சோளமாவு மைதா மிளகாய் தூள் சேர்க்கவும்.
 21. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
 22. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 23. பொரித்து எடுத்த பீர்க்கங்காய்.
 24. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 25. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 26. சோயா சாஸ் சேர்க்கவும்.
 27. தக்காளி சாஸ் சேர்க்கவும்
 28. சில்லி சாஸ் சேர்க்கவும்.
 29. பொரித்த பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.
 30. பீர்க்கங்காய் மஞ்சூரியன் தயார்.
 31. 5.பரங்கிக்காய் ஃபிரைட் ரைஸ்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
 32. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
 33. துருவிய பூசணிக்காயை சேர்த்து வதக்கவும்.
 34. காய் வெந்ததும் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
 35. சாதம் சேர்க்கவும்.
 36. கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்
 37. நன்றாக கிளறி இறக்கவும்.
 38. பரங்கிக்காய் ஃபிரைட் ரைஸ் தயார்
 39. 6.பீர்க்கங்காய் பிரியாணி: அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சோம்பு பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
 40. வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 41. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும்.
 42. தோல் நீக்கி நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
 43. மஞ்சள்தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
 44. அரிசிக்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
 45. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரிசியை சேர்க்கவும்.குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
 46. பீர்க்கங்காய் பிரியாணி தயார்.
 47. 7.புடலங்காய் நூடுல்ஸ்: அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
 48. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
 49. நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.
 50. புடலங்காய் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
 51. சோளமாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
 52. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
 53. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் புடலங்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
 54. பொரித்த புடலங்காய்
 55. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 56. முட்டை உடைத்து ஊற்றி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
 57. முட்டை வெந்ததும் பொரித்த புடலங்காய் சேர்த்து வதக்கவும்.
 58. வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
 59. எல்லாம் வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
 60. புடலங்காய் நூடுல்ஸ் தயார்.
 61. 8.சுரைக்காய் சாக்கோ பாயாசம்: சேமியாவை வறுத்து கொள்ளவும்.
 62. முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.
 63. அடுப்பில் வாணலியை வைத்து துருவிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும். சுரைக்காய் 50% வேகும் வரை வதக்கவும்.
 64. வறுத்த சேமியா சேர்த்து வதக்கவும்.
 65. பால் சேர்க்கவும்.
 66. சர்க்கரை சேர்க்கவும்.
 67. 2 ஸ்பூன் பாலில் எடுத்து கொள்ளவும்.
 68. பாலில் கொக்கோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
 69. அதை அடுப்பில் உள்ள பாயாசத்தில் சேர்க்கவும்.
 70. நன்றாக கலந்து வேக விடவும்.
 71. எல்லாம் தயாரானதும் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
 72. சுரைக்காய் சாக்கோ பாயாசம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்