வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் மஞ்சூரியன்

Photo of Bottle gourd Manchurian by Rachell Revathi Samuel at BetterButter
498
1
0.0(0)
0

சுரைக்காய் மஞ்சூரியன்

Oct-23-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் மஞ்சூரியன் செய்முறை பற்றி

சுரைக்காய் வைத்து செய்யப்படும் மஞ்சூரியன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சுரைக்காய் 1 சிறியது
  2. சோளமாவு 5 ஸ்பூன்
  3. மைதா 2 ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 1 ஸ்பூன் மற்றும் பொரிக்க தேவையான அளவு
  7. வெங்காயம் 1
  8. பச்சை மிளகாய் 1
  9. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  10. சில்லி சாஸ் 1/2 ஸ்பூன்
  11. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
  2. சுரைக்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
  3. துருவிய சுரைக்காயை பிழிந்து சாறை எடுத்து கொள்ளவும்.
  4. காயில் உள்ள தண்ணீரை நீக்கிய சுரைக்காயில் மைதா மாவு சோள மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுரைக்காயை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. பொன்னிறமாக பொரித்து எடுத்த சுரைக்காய் உருண்டைகள்.
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  10. நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  11. சோயா சாஸ் சேர்க்கவும்.
  12. சில்லி சாஸ் சேர்க்கவும்.
  13. தக்காளியை சாஸ் சேர்க்கவும்.
  14. சாஸ் சேர்த்த பின் நன்றாக கலந்து கொண்டு உப்பு சேர்க்கவும்.
  15. பொரித்த சுரைக்காயை சேர்த்து கிளறவும்.
  16. 1 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.
  17. சுவையான சுரைக்காய் மஞ்சூரியன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்