வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் பர்பி

Photo of Coconut Milk Burfi by Menaga Sathia at BetterButter
203
1
0.0(0)
0

தேங்காய்பால் பர்பி

Oct-24-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் பர்பி செய்முறை பற்றி

திருமதி.மீனாட்சி அம்மாளின் சமைத்து பார் புத்தகத்திலிருந்து செய்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு -1/2 கப்
  2. கோதுமைமாவு -1/2 கப்
  3. துருவிய தேங்காய் -1/4 கப்
  4. சர்க்கரை-2 கப்
  5. நெய் - 1/2 கப்+2 டேபிள்ஸ்பூன்
  6. குங்குமப்பூ- சிறிதளவு
  7. பச்சை கற்பூரம் -கடுகளவு
  8. ஏலக்காய்பொடி -1/4 டீஸ்பூன்
  9. முதல் தேங்காய்பால்-1/2 கப்
  10. இரண்டாம் தேங்காய்பால் -1/4 கப்
  11. மூன்றாம் தேங்காய்பால்-1/8 கப்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் தேங்காய்துறுவலை வாசனை வரும் வரை வறுக்கவும்.
  2. பின் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கடலைமாவு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கோதுமைமாவு இவற்றை வாசனை வரும் வறுத்து எடுக்கவும்.
  3. ஒரு டிரேயில் சிறிது நெய் தடவி ரெடியாக வைக்கவும்
  4. கடாயில் சர்க்கரை, இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்பால் ஊற்றவும்.
  5. சர்க்கரை கரைந்து 1 கம்பிபதம் வந்ததும் குங்குமப்பூ, தேங்காய்துறுவல், வறுத்த மாவுகளை சேர்த்து கலக்கவும்.
  6. பின் முதல் தேங்காய்பால் சேர்த்து கலக்கவ் ம்.இடையிடையே நெய் சேர்த்து கிளறவும்.
  7. ஒரு கட்டத்தில் கலவை பொங்கி வரும் போது அடுப்பை அனைத்து ஏலக்காய்பொடி, பச்சை கற்பூரம் பொடித்து சேர்த்து கலக்கவும்
  8. உடனே நெய் தடவிய டிரேயில் ஊற்றவும். கலவை நீர்த்தாற்போல் இருக்கும்.
  9. ஆனால் ஆறியதும் கெட்டியாகிவிடும்.பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்