வீடு / சமையல் குறிப்பு / திரட்டு பால் / பால்கோவா

Photo of Palkova by Priya Tharshini at BetterButter
672
0
0.0(0)
0

திரட்டு பால் / பால்கோவா

Oct-25-2018
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

திரட்டு பால் / பால்கோவா செய்முறை பற்றி

பண்டிகை காலத்தில் செய்யப்படும் சுவையான இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1 லிட்டர் ( 4 கப் )
  2. சக்கரை - 1/2 கப்
  3. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு அடிகனமான கடாயில் 4 கப் பால் சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்சவும்.
  2. கரண்டியால் அடிக்கடி பாலை கலக்கவும். இதனால் பால் அடி பிடிக்காமலும் பொங்காமலும் இருக்கும்.
  3. பால் காய காய ஒரங்களில் படியும் பால் ஏட்டினை மீண்டும் பாலில் சேர்க்கவும்.
  4. பாலின் அளவு பாதியாக குறைந்ததும் நெய் சேர்த்து கலக்கவும்.
  5. பாலில் உள்ள நீர் வற்றி 1/4 லிட்டர் ஆக குறைந்து சிறு சிறு கட்டிகளாக உறுவாகும்.
  6. அப்போது சக்கரை சேர்த்து கலறவும். சக்கரை சேர்த்ததும் சிறிது நீர் விடும்.
  7. பால் அனைத்தும் வற்றி கட்டியாகும் வரை கைவிடாமல் கிளரவும்.
  8. பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கலறினால் பால்கோவா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்