வீடு / சமையல் குறிப்பு / பிரட் கார்ன் ஃப்ளவர் குலாப் ஜாமுன்

Photo of Bread Corn Flour Gulab Jamun by Bena Aafra at BetterButter
486
1
0.0(0)
0

பிரட் கார்ன் ஃப்ளவர் குலாப் ஜாமுன்

Oct-26-2018
Bena Aafra
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் கார்ன் ஃப்ளவர் குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய இனிப்பு.வித்தியாசமான முறையில் செய்து பார்ப்போம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட்-6
  2. கார்ன் ஃப்ளவர் மாவு -1டீஸ்பூன்
  3. சர்க்கரை -2கப்
  4. தண்ணீர் -3கப்
  5. ஏலக்காய் -2
  6. குங்குமப்பூ -சிறிது
  7. பால்-1/2டம்ளர்
  8. நெய்
  9. எலுமிச்சை சாறு-1/2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பிரட்-ஐ ஒரு பவுலில் துண்டுகளாக பிய்த்து போட்டுக்கொள்ளவும்.
  2. அவற்றுடன் பால் சேர்த்து மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
  3. பின் அதனுடன் சோளமாவு சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
  5. பின் அதனுடன் தட்டிய ஏலக்காய் ,குங்குமப்பூ சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை காய்ச்சவும்.
  6. பின் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  7. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து நெய் விடவும்.
  8. ஊறிய மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  9. பிறகு பொரித்து எடுத்த உருண்டைகளை பாகில் போட்டு 6மணிநேரம் வரை ஊறவிடவும்.
  10. பிறகு சுவையான பிரட் சோளமாவு குலாப்ஜாமுன் தயார்.ஃப்ரிஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்