BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு தேங்காய்ப்பால் தேன்குழல்

Photo of Chettinadu coconut milk  thengkulal by Adaikkammai annamalai at BetterButter
0
4
0(0)
0

செட்டிநாடு தேங்காய்ப்பால் தேன்குழல்

Oct-27-2018
Adaikkammai annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு தேங்காய்ப்பால் தேன்குழல் செய்முறை பற்றி

இது மிகவும் சுவையான , சுலபமாக செய்ய கூடிய ஒன்று ,, நம் தீபாவளி திருநாளில் கண்டிப்பாக இருக்க கூடியது, தேங்காய் பாலில் செய்தால் இன்னும் சுவை அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி – 1 கிலோ
  2. உளுந்து – 200 கிராம்
  3. உப்பு – சிறிதளவு
  4. எண்ணெய் – 500 ml
  5. தேங்காய் – 1

வழிமுறைகள்

  1. உளுந்தை பொன் நிறமாக வறுத்தெடுத்து, குண்டு பச்சரிசியுடன் நன்றாக கலந்து விடவும், இதை நன்றாக அரைத்து கொள்ளவும் (ரைஸ் மில்லில் அரைத்தால் நன்கு அரைபடும்)
  2. மாவு வழுவழுப்பாக இருக்க வேண்டும். அதனால் மில்லில் கொடுத்து வாங்கிய பின் ஒரு சலி சலிச்சு எடுத்து கொள்ளவும்
  3. தேங்காய்யில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதை வடிகட்டி கெட்டியான பால்போல் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் பாலை லோசான சுட்டில் ஒரு கொதிக்க வைத்து இருக்கவும்
  5. மாவை எடுத்து கொள்ளவும், தேவையான அளவு உப்பு போட்டு கலந்துக் கொள்ளவும்.
  6. ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய் சேர்க்கவும், அதில் தேங்காய் பாலை ஊற்றி முறுக்கு மாவை பிசைந்துக் கொள்ளவும்
  7. மாவு கையில் ஒட்டதாபடி பிசைந்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி, மாவை முறுக்கு புளியும் கட்டையில் வைத்துக் கொள்ளவும்.
  8. எண்ணெய் சூடான பிறகு முறுக்கு மாவை வட்ட வட்டமாக சுற்றி, எண்ணெயில் போட்டு பொன்நிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்
  9. இப்பொழுது தேங்காய் பால் முறுக்கு தயார் ,மொறு மொறுப்பாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்