Photo of Badusha by Pavithra Prasad at BetterButter
267
1
0.0(0)
0

பாதுஷா

Oct-27-2018
Pavithra Prasad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாதுஷா செய்முறை பற்றி

அம்மாவின் இனிப்பான தீபாவளி பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • தீபாவளி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருக்கிய வெண்ணெய் கால் கப்
  2. ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  3. தயிர் ஒன்றரை டீஸ்பூன்
  4. ஒன்னரை கப் மைதா மாவு
  5. உப்பு கால் டீஸ்பூன்
  6. பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
  7. சர்க்கரை ஒரு கப்
  8. தண்ணீர் அரை கப்
  9. எலுமிச்சை பழம் நீர் அரை டீஸ்பூன்
  10. ஏலக்காய் பொடித்தது கால் டீஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், ஆயில் ,பேக்கிங் சோடா ,தயிர் உப்பு சேர்த்துக் கலக்கவும்
  2. இதனுடன் மைதா சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் எடுக்கவும்
  3. ஒரு பத்து நிமிடம் வைக்கவும்
  4. சர்க்கரை பாகு உண்டாக்கவும்
  5. சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடித்தது எலுமிச்சைபழம் சேர்க்கவும்
  6. எடுத்து வைத்த கலவை நன்றாக எலுமிச்சை சைஸ் உருண்டை பிடிக்கவும்
  7. ஒரு உருளையை கையில் எடுத்து நன்றாகத் தட்டி அதன் நடுவில் அமர்த்தவும்
  8. இதேபோல் மற்ற உருளைகளையும் பிடிக்கவும்
  9. சட்டியில் நன்றாக எண்ணெய் சூடாக்கவும்
  10. சூடாக்கி எண்ணெயில் தட்டி வைத்து உருளையை இடவும்
  11. இட்ட பிறகு ஸ்டவ் ஆப் செய்யவும்
  12. உருளைகள் மேல் பொங்கும் பொழுது ஆன் செய்து வைக்கவும்
  13. சிறிய தீயில் வைத்தால் போதும்
  14. பொன்னிறமாக ஆனதும் அதை எடுக்கவும்
  15. எடுத்த பாதுஷா சர்க்கரை பாகில் சேர்க்கவும்
  16. 10 நிமிடங்கள் சர்க்கரை பாகில் எடுத்து வைத்து பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றவும்
  17. ஒரு நாள் கழிந்து பாதுஷாக்கள் ரெடி ஆகும்
  18. சுவையான பாதுஷா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்