உளுத்தங்களி | Uzhundhu kali / urad dal halwa in Tamil

எழுதியவர் Subashini Murali  |  13th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Uzhundhu kali / urad dal halwa by Subashini Murali at BetterButter
உளுத்தங்களிSubashini Murali
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

78

0

உளுத்தங்களி recipe

உளுத்தங்களி தேவையான பொருட்கள் ( Ingredients to make Uzhundhu kali / urad dal halwa in Tamil )

 • 10 முந்திரி பருப்பு (வறுத்தது)
 • 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
 • 1/4 கப் நல்லெண்ணெய்
 • 3 கப் தண்ணீர்
 • 2 கப் பனை வெல்லத் தூள்
 • 2 தேக்கரண்டி அரிசி
 • 1 கப் வெள்ளை உளுந்து

உளுத்தங்களி செய்வது எப்படி | How to make Uzhundhu kali / urad dal halwa in Tamil

 1. வெள்ளை உளுந்தை நீங்கள் வாசனையை உணரும்வரை வேறெதுவும் சேர்க்காமல் வறுக்கவும்.
 2. ஆறியதும் உளுந்து அரிசியை பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு கடாயில் பொடியாக்கப்பட்ட வெல்லம், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை தண்ணீரோடு சேர்த்து கொதிக்கவிட்டு வடிக்கட்டிக்கொள்ளவும்.
 4. ஒரு நான் ஸ்டிக் அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் வெல்லத் தண்ணீரை ஊற்றி கொதி நிலைக்கு வரவிடவும்.
 5. அரைத்த மாவைச்சேர்த்து கட்டி சேராமல் இருக்க தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். (மிதமானச் சூட்டில் வைக்கவும்)
 6. அடர்த்தியானதும், நல்லெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும் (உங்களுக்கு தேவையென்றால் நெய்யைக் கூட இதற்குப் பதிலாகச் சேர்த்துக்கொள்ளலாம்).
 7. கடாயின் பக்கங்களிலிருந்து விடுபடும்வரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்து வறுத்த முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கவும்.
 8. லட்டு போல் செய்துகொண்டு பாத்திரங்களில் பரிமாறவும்.

Reviews for Uzhundhu kali / urad dal halwa in tamil (0)