வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ரோல்

Photo of Chicken Stuffed Roll by Sumaiya shafi at BetterButter
292
0
0.0(0)
0

சிக்கன் ரோல்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ரோல் செய்முறை பற்றி

சிக்கன் ரோல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் 400 கிராம் எலும்பு இல்லாமல்
  2. வெங்காயம் 5 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 2 பொடியாக நறுக்கியது
  4. பச்சைமிளகாய்-2
  5. உருளைக்கிழங்கு 2 வேகவைத்து
  6. மல்லி இலை சிறிதளவு
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  10. உப்பு தேவைக்கு ஏற்ப
  11. தோசை செய்வதற்கு
  12. மைதா ஒரு கப்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. பிரெட் தூள் 200 கிராம்
  15. முட்டை 3

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றவும்
  2. அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் சிறிய துண்டுகளாக வெட்டிய சிக்கனை சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
  5. சிக்கன் வெந்ததும்,வேகா வைத்து பிசைந்த உருளைக்கிழங்கு, சிவப்பு மிளகாய் தூள் ,உப்பு, கரம் மசாலா எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும்
  6. கடைசியில் மல்லி இலை சேர்த்து இறக்கவும்
  7. தோசை செய்வதற்கு முதலில் மைதா மாவில் உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்
  8. பின் தோசை ஊற்றி அதில் இந்த சிக்கன் அடக்கத்தை உள்ளே வைத்து ரோல் மாதிரி சுத்தி கொள்ளவும்.
  9. இதே போல் எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும்
  10. கடைசியில் முட்டையில் முக்கி பின் பிரட் தூளில் பிரட்டு எடுக்கவும்
  11. ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான சிக்கன் ரோல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்