வீடு / சமையல் குறிப்பு / லட்டு (தென்னிந்திய ஸ்பெஷல்)

Photo of Ladoo(South India Spl) by Mallika Udayakumar at BetterButter
364
0
0.0(0)
0

லட்டு (தென்னிந்திய ஸ்பெஷல்)

Nov-06-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

லட்டு (தென்னிந்திய ஸ்பெஷல்) செய்முறை பற்றி

லட்டு தென்னிந்திய ஸ்பெஷல்.கண்ணா.... லட்டு தின்ன ஆசையா?” இந்த வசனத்தை அடிக்கடி நாம் கேட்கிறோம்...லட்டு என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது? .லட்டு என்ற பெயர் சமஸ்க்ருதத்திலிருந்து வந்திருக்கலாம். லட்டூக என்றால் உருண்டையான வடிவம் என்று பொருளாம். (அப்போ லட்டு லட்டா மார்க் வரும்னா முட்டை மார்க்குன்னா அர்த்தம்?ன்னு கேக்கக்கூடாது)  இந்த லட்டு இல்லாத திருமணமோ விழாவோ கிடையாது என்று சொல்லலாம். திருப்பதி லட்டு என்றால் தெரியாதவர்கள் உண்டோ?

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைமாவு-500கிராம்
  2. சர்க்கரை-600, கிராம்
  3. உப்பு -தேவையான
  4. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  5. சமையல் சோடா-1/4ஸ்பூன்
  6. குங்குமப்பூ-10 இதழ்
  7. ஏலக்காய் தூள்-2-3 ஸ்பூன்
  8. முந்திரி, திராட்சை -75 கிராம் (தலா)
  9. கிராம்பு -10
  10. நெய் -100-200மில்லி
  11. சமையல் எண்ணெய்-1லிட்டர்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்
  2. படத்தில் உள்ளது போல் ஓட்டைக்கரண்டி இருந்தால் நல்லது.இல்லை என்றால் வீட்டிலேயே உள்ள சாதாரண ஓட்டை கரண்டியால் செய்யவும்
  3. அரை கிலோ கடலைமாவு எடுத்து கொள்ளவும்
  4. அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. சமையல் சோடா உப்பு சிறிதளவு சேர்க்கவும்
  6. இதற்கு 250 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்
  7. ஏலக்காய் தூள் செய்யவும்
  8. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுக்கவும் அதில் கிராம்பு சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  9. சர்க்கரை பாகுக்கு -சர்க்கரை 600கிராம் உடன் தண்ணீர் 300 மில்லி தண்ணிர் ஊற்றி கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும், அதில் குங்குமப்பூ சேர்த்து கொள்ளவும்
  10. கரைத்த மாவை இன்னொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம்
  11. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ய விடவும்
  12. லட்டுக்கு பூந்தி சுட ... இப்படி மாவு பதமாக இருக்கவேண்டும்
  13. காய்ந்த சூடான எண்ணெயில் ஊற்றி, படத்தில் உள்ளது போல் ஓட்டைக்கரண்டியில் ஊற்றினால் பூந்தி முத்து முத்தாக உதிரும்
  14. இதை சத்தம் அடங்கியதும் உடனே எடுக்கவும்.மிக முருவலாக எடுக்க வேண்டாம்
  15. இந்த அளவு போதும்
  16. பூந்தியை எடுத்து இன்னொரு பாத்திரத்தில் போடவும்
  17. இதை போல்
  18. பின்னர் சர்க்கரை பாகு ஒற்றை கம்பி பதம் ஆனவுடன் அதில் பூந்தியை சேர்க்கவும்
  19. முந்திரி திராட்சையை கிராம்பு சேர்த்து கொட்டவும்
  20. இதை டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கொள்ளலாம், சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
  21. 5: கிளறவும்.நெய் தேவைப்பட்டால் 50 மில்லி ஊற்றவும்
  22. மரக்கட்டை கரண்டியால் குத்தவும்
  23. பிறகு லட்டு பிடிக்கவும்
  24. ஆஹா அருமையான லட்டு தயார்
  25. கடைபோல உருண்டையாக வர ... படத்தில் உள்ளது போல உருட்டவும்
  26. லட்டு தயார்(இயற்கை கலர் தான்)
  27. கிட்டத்தட்ட அரை கிலோ கடலைமாவுக்கு 65 லட்டு கிடைத்தது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்