ரவா லட்டு | Rava Ladoo in Tamil

எழுதியவர் Swapna Sunil  |  16th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Rava Ladoo  by Swapna Sunil at BetterButter
ரவா லட்டுSwapna Sunil
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

241

0

ரவா லட்டு recipe

ரவா லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Rava Ladoo in Tamil )

  • 1 கப்: ரவை
  • 1 கப்: புதிய தேங்காய்
  • 1 கப் : சர்க்கரை
  • 1 தேக்கரண்டி : ஏலக்காய்த் தூள்
  • 1 தேக்கரண்டி: நெய்
  • 1/4 கப்: உங்கள் விருப்பத்திற்கேற்ப நறுக்கிய வறுத்த பருப்புகள்
  • 1/4 கப் : பால்

ரவா லட்டு செய்வது எப்படி | How to make Rava Ladoo in Tamil

  1. ஒரு பிளண்டரில் தேங்காயை உலர் நிலையில் பொறபொறப்பாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு அகலமான நான் ஸ்டிக் கடாயில் நெய்யோடு சூடுபடுத்தவும். சூடானது, ரவையைச் சேர்த்துச் சிறுதீயில் நிறத்தை மாற்றாமல் வாசனை வெளியேறும்வரை வறுக்கவும்.
  3. அடுத்து அரைத்தத் தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, இரண்டொரு விநாடிகள் வேகவைக்கவும்.
  4. பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு, சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலந்து ஒரு அகலமானப் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து ஏலக்காய்த் தூள் நறுக்கிய பருப்புகளைச் சேர்த்து ஒன்றரக் கலக்கும்வரை கலந்துகொள்ளவும்.
  6. இந்தக் கலவையைக் கொஞ்சம் அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.
  7. பின்னர் பாலைத் தெளித்து தேவையான வடிவத்தில் ரவாக் கலவையை லட்டுக்களாக இருக்கமாகப் பிடித்து செய்துகொள்ளவும்.
  8. மீதமுள்ளக் கலவையையும் இதேபோல் செய்து காற்றுப்புகாதப் பாத்திரத்தில் சேமிக்கவும்.
  9. இருப்பு இருக்கும்போது அனுபவிக்கவும், ஒரு வாரம் வரைக்கும் அறையின் வெப்பத்தில் சிறப்பாக இருக்கும்.
  10. தயாரித்து அனுபவிக்கவும்... எளிமையானது அதே சமையல் சுவையான இனிப்பு!!

எனது டிப்:

பருப்புகளை வறுத்துக்கொண்டேன். ஆனால் நீ்ங்கள் உலர்ந்ததைப் பயன்படுத்தினால் முதலில் நெய்யில் வறுத்து பின்னர் ரவையில் கலந்துகொள்ளவும்... உங்கள் ருசிக்கேற்றவாறு சர்க்கரையைச் சரிசெய்துகொள்க, ஆனால் குறிப்பிடப்பட்ட சர்க்கரை அளவு இந்திய சுவையுணர்விக்கு நேர்த்தியான!!

Reviews for Rava Ladoo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.