வீடு / சமையல் குறிப்பு / மினி சாக்கோ ஜாங்கிரி

Photo of Mini choco Jangiri by Rachell Revathi Samuel at BetterButter
417
1
0.0(0)
0

மினி சாக்கோ ஜாங்கிரி

Nov-13-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மினி சாக்கோ ஜாங்கிரி செய்முறை பற்றி

சாக்லேட் சிரப் சேர்த்து செய்யப்படும் ஜாங்கிரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுத்தம்பருப்பு 1/2 கப்
  2. சாக்கோ சிரப் 3 -5 ஸ்பூன்
  3. சர்க்கரை 1/2 கப்
  4. எண்ணெய் பொரிக்க
  5. முந்திரி அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தை 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீர் இல்லாமல் உளுந்தை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  3. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்கவும்.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. சாக்கோ சிரப் சேர்க்கவும்.
  6. நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. பால் பாக்கெட் அல்லது பாலிதின் கவரில் மாவை எடுத்து கொள்ளவும்.நுனியில் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
  8. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  10. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாக்கெட்டில் உள்ள மாவை வட்டமாக ஜாங்கிரிகளாக பிழிந்து விடவும்.
  11. ஜாங்கிரி பொரிந்ததும் சர்க்கரை பாகில் சேர்த்து 5-10 நிமிடங்கள் பின் எடுத்து விடவும்.இதே போல் மீதி மாவையும் செய்து கொள்ளவும்.
  12. சுவையான மினி சாக்கோ ஜாங்கிரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்