வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஜாமூன்

Photo of Bread Jamun by Rachell Revathi Samuel at BetterButter
286
1
0.0(0)
0

பிரட் ஜாமூன்

Nov-13-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஜாமூன் செய்முறை பற்றி

பிரட் துண்டுகளை வைத்து செய்யப்படும் ஜாமூன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 7
  2. பால் 4-5 ஸ்பூன்
  3. பொடித்த வெல்லம் 1/3 கப்
  4. பாதாம் பருப்பு 5
  5. முந்திரி 5-7
  6. ஏலக்காய் 2
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. பிரட் துண்டுகளில் உள்ள ஓரங்களை வெட்டி கொள்ளவும்.
  2. சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  3. மிக்ஸியில் பிரட் துண்டுகளை போட்டு அரைக்கவும்.
  4. மிக்ஸியில் 10விநாடிகள் அரைத்தால் போதுமானது.
  5. ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
  6. தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  7. வெல்லம் கம்பி பதத்திற்கு முந்தைய பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.
  8. பிரட் துகள்களை பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  9. பிசைந்து கொள்ளவும்.
  10. பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  11. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதனுள் பாதாம் அல்லது முந்திரி பருப்பை வைத்து உருட்டிக் கொள்ளவும்.
  12. இதேபோல் அனைத்தையும் செய்து கொள்ளவும்.
  13. எல்லா உருண்டைகளையும் நன்றாக உருட்டிக் கொள்ளவும்.
  14. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  15. பொரித்த பின் அதை வெல்லப் பாகில் சேர்க்கவும்.
  16. குறைந்தது 30 நிமிடங்கள் பாகில் ஊற விடவும்.
  17. சுவையான பிரட் ஜாமூன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்