வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சேஷ்வான் நூடுல்ஸ்

Photo of Chicken Schezwan Noodles by Sumaiya shafi at BetterButter
578
0
0.0(0)
0

சிக்கன் சேஷ்வான் நூடுல்ஸ்

Nov-13-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சேஷ்வான் நூடுல்ஸ் செய்முறை பற்றி

சிக்கன் சிக்கன் நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 250 grams boneless
  2. சிவப்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  3. சோள மாவு ஒரு டீஸ்பூன்
  4. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  5. லெமன் ஜூஸ் 2 டீஸ்பூன்
  6. முட்டை கோஸ் அரை கப்
  7. பச்சை குடைமிளகாய் கால் கப்
  8. சிவப்பு குடைமிளகாய் கால் கப்
  9. மஞ்சள் குடைமிளகாய் கால் கப்
  10. வெங்காயத்தாள் 2(ஸ்பிரிங் ஆனியன்)
  11. கேரட் ஒன்று
  12. முட்டை 3
  13. நூடுல்ஸ் பாக்கெட் 2
  14. காய்ந்த மிளகாய் பேஸ்ட் 2 டீஸ்பூன்
  15. சோயா சாஸ் 2 டீஸ்பூன்
  16. ஹாட் சாஸ் 2 டீஸ்பூன்
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் உப்பு சேர்த்து நூடுல்ஸை வேக வைத்துக் கொள்ளவும்
  2. பின் சிக்கனை சிவப்பு மிளகாய்த்தூள் ,லெமன் ஜூஸ்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,உப்பு,சோள மாவு,அரிசி மாவு எல்லாவற்றையும் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுக்கவும்.
  4. ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் முட்டை ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொத்தி விட வேண்டும். பின் அதை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  5. பின் அதே பாத்திரத்தில் வெங்காயம், முட்டைகோஸ் பச்சை குடைமிளகாய் ,சிவப்பு குடைமிளகாய்,கேரட் ,மஞ்சள் குடைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும்.
  6. முக்கால் பாகம் வெந்த பிறகு சிக்கனை கொத்திய முட்டையும் அதனுடன் சேர்க்கவும்.
  7. பின் அதில் காய்ந்த மிளகாய் பேஸ்ட், சோயா சாஸ் ,சில்லி சாஸ்,சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும்.
  8. கடைசியில் வேகவைத்த நூடுல்ஸ் அதனுடன் சேர்த்து கிளறி பின் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்