வீடு / சமையல் குறிப்பு / நண்டு வறுவல்

Photo of Crab Fry by Menaga Sathia at BetterButter
942
2
0.0(0)
0

நண்டு வறுவல்

Nov-14-2018
Menaga Sathia
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு வறுவல் செய்முறை பற்றி

மிகவும் சுவையான மற்றும் காரசாரமான நண்டு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நண்டு-1 கிலோ
  2. வெங்காயம் -1,பொடியாக நறுக்கியது
  3. தக்காளி-1,பொடியாக நறுக்கியது
  4. சோம்பு-1 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை-2 ஈர்க்கு
  6. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  7. எண்ணெய் -2டேபிள்ஸ்பூன்
  8. தேங்காய்துறுவல் -1/4 கப்
  9. உப்பு-தேவைக்கு
  10. வரமிளகாய்தூள் -1&1/2 டேபிள்ஸ்பூன்
  11. மிளகு -1 டீஸ்பூன்
  12. சீரகம் -1/2 டீஸ்பூன்
  13. பச்சைமிளகாய்-2
  14. சோம்பு -1/2 டீஸ்பூன்
  15. பூண்டுப்பல் -4
  16. இஞ்சி-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. நண்டினை சுத்தம் செய்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு,சீரகம்,1/2 ஸ்பூன் சோம்பு,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை வதக்கவும்.பின் ஆறியதும் மஞ்சள் தூள்,தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
  3. கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சோம்பு ,1ஈர்க்கு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் நண்டு,உப்பு,மிளகாய்தூள்,அரைத்த மசாலா சேர்த்து கலக்கவும்.
  6. 3/4 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
  7. நன்றாக நீர் சுண்டி வரும்போது சுருள கிளறி கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்.
  8. நண்டு சீக்கிரம் வெந்துவிடும்,குறைவாக நீர் சேர்த்து வேகவைத்தால் போதும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்