வீடு / சமையல் குறிப்பு / பாதாமி பனீர் கிரேவி

Photo of Badami Paneer Gravy by Sowmya Sundar at BetterButter
259
2
0.0(0)
0

பாதாமி பனீர் கிரேவி

Nov-17-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாதாமி பனீர் கிரேவி செய்முறை பற்றி

பாதாம் மசாலா விழுது மற்றும் பனீர் சேர்த்து செய்த ரிச்சான கிரேவி இது. சுலபமாக செய்து விடலாம்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் துண்டுகள் ஒன்றரை கப்
  2. தக்காளி 2
  3. எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்
  4. கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
  5. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மல்லி தூள் 1 டீஸ்பூன்
  8. சர்க்கரை 1/8 டீஸ்பூன்
  9. பால் 1/2 கப்
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. எலுமிச்சை சாறு 1/2 டீஸ்பூன்
  12. பாதாம் பருப்பு 3 அலங்கரிக்க
  13. அரைக்க:
  14. பாதாம் பருப்பு- 15
  15. வெங்காயம் 1
  16. இஞ்சி ஒரு துண்டு
  17. பூண்டு 6 பல்
  18. மிளகாய் வற்றல் 2
  19. பச்சை மிளகாய் 1

வழிமுறைகள்

  1. பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து தோல் உரித்து கொள்ளவும்
  2. அதே நேரம் பனீரை வெந்நீரில் போட்டு எடுத்து வடிகட்டி அதனுடன் மிளகு தூள் சிறிது உப்பு சேர்த்து மாரிக்கனேட் செய்து பத்து நிமிடம் வைத்து கொள்ளவும். இப்படி செய்தால் பன்னீர் சாஃப்ட் ஆகவும் உப்பு காரம் ஊறியும் இருக்கும்.
  3. அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்
  4. பாதாம் மசாலா தயார்
  5. தக்காளியை விழுதாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த பாதாம் விழுது,மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.பனீரில் உப்பு சேர்த்து இருப்பதால் அதற்கு தக்க சேர்க்கவும்.
  7. பின் அதனுடன் தக்காளி விழுது,மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  8. பின் மாரிக்கனேட் செய்து வைத்த பொ௱னீர் மற்றும் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  9. சேர்ந்து நன்றாக கொதித்து கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து இறக்கவும்
  10. கொத்தமல்லி தழை,எலுமிச்சை சாறு, நறுக்கிய பாதாம் பருப்பு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்