வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் புலாவ்

Photo of Easy veg pulao by Deepa Srivatsan at BetterButter
317
1
0.0(0)
0

வெஜிடபிள் புலாவ்

Nov-22-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் புலாவ் செய்முறை பற்றி

உதிரியாக வடித்த சாதம் ரெடியாக இருந்தால் 20 நிமிடத்தில் இதை தயார் செய்துவிடலாம் சுவை வித்தியாசமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய வெங்காயம் 2
  2. பச்சை பட்டாணி கால் கப்
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் 100 கிராம்
  5. தக்காளி ஒன்று
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. புதினா அரை கட்டு
  8. சிறிய வெங்காயம்
  9. பச்சை மிளகாய் 3
  10. தக்காளி ஒன்று அரைப்பதற்கு
  11. மராட்டி மொக்கு ஒன்று
  12. பட்டை ஒரு சிறிய துண்டு
  13. கிராம்பு-2
  14. எண்ணெய் 3ஸ்பூன்
  15. நெய் அரை ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பீன்ஸ் மற்றும் கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. புதினா மற்றும் சிறு வெங்காயத்தை பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு தக்காளியை நன்றாக நறுக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி இலவங்கப்பட்டை அன்னாசிப் பூ ஆகியவற்றை போடவும்
  5. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறியுடன் பட்டாணியை சேர்த்து போட்டு நன்றாக வதக்கவும்
  6. இரண்டு நிமிடம் கழித்து புதினா பச்சை மிளகாய் விழுது இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் தேவையானால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம்
  8. காய்கறி நன்றாக வெந்ததும் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்