இஞ்சி மீன் வறுவல் | Ginger fish fry in Tamil

எழுதியவர் Asiya Omar  |  25th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ginger fish fry by Asiya Omar at BetterButter
இஞ்சி மீன் வறுவல்Asiya Omar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

0

இஞ்சி மீன் வறுவல் recipe

இஞ்சி மீன் வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ginger fish fry in Tamil )

  • முள்ளில்லாத மீன் துண்டுகள் -300 கிராம்
  • மீனில் தடவ மசாலாவிற்கு :-
  • மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு.
  • இஞ்சி வறுவல் செய்ய:-
  • எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
  • கடுகு-1/2 தேக்கரண்டி
  • கிள்ளிய மிளகாய் வற்றல்-1
  • கருவேப்பிலை -1 இணுக்கு
  • துருவிய இஞ்சி 2 தேக்கரண்டி.
  • நறுக்கிய வெங்காயம் -1
  • மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
  • அலங்கரிக்க நறுக்கிய மல்லி இலை -சிறிது.

இஞ்சி மீன் வறுவல் செய்வது எப்படி | How to make Ginger fish fry in Tamil

  1. மீன் துண்டுகளில் மேற் சொன்னபடி மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு பிரட்டி வைக்கவும்.
  2. கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் 1-2 மே.க.எண்ணெய் விட்டு மீனை பொரித்து எடுக்கவும்.
  4. இஞ்சி வறுவல் செய்ய பொருட்கள் தயார் செய்யவும்.வெங்காயம் நறுக்கி எடுக்கவும்.இஞ்சி துருவி எடுக்கவும்.
  5. மீன் பொரித்து எடுத்த எண்ணெய் உள்ள தவாவில் கடுகு,வற்றல்,கருவேப்பிலை ,வெங்காயம்,துருவிய இஞ்சி சேர்க்கவும் .நன்கு வதக்கவும்,சிறிது மிளகாய்த்தூள்,சிறிது உப்பு தூவி பிரட்டவும்.,அத்துடன் பொரித்த மீன் சேர்க்கவும்.
  6. மீன் உடையாதவாறு பிரட்டவும்.மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும். இஞ்சி மீன் வறுவல் தயார்.விரும்பினால் சில துளிகள் எலுமிச்சை பிழியலாம்.
  7. மிக சுவையாக இருக்கும்.பேலியோ டயட் இருப்பவர்கள் செய்து சாப்பிடலாம்.

எனது டிப்:

முள் உள்ள மீன் துண்டிலும் செய்யலாம்.மீனை தவாவில் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்தால் போதுமானது.

Reviews for Ginger fish fry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.