வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான காய்கறி ஊறுகாய்

Photo of Spicy Veggie Pickles by Hameed Nooh at BetterButter
260
1
0.0(0)
0

காரசாரமான காய்கறி ஊறுகாய்

Nov-26-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான காய்கறி ஊறுகாய் செய்முறை பற்றி

பல வகையான காய்கறிகளைக் கொண்டு செய்யக்கூடிய மிகவும் எளிதான காய்கறி ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நறுக்கிய கேரட் 1/2 கப்
  2. நறுக்கிய பீன்ஸ் 1/2 கப்
  3. நறுக்கிய மாங்காய் 1/2 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  8. இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
  9. பூண்டு 10 பற்கள்
  10. வினிகர் 1 கப்
  11. நல்லெண்ணெய் 1 கப்
  12. உப்பு 2 தேக்கரண்டி
  13. எலுமிச்சை 1

வழிமுறைகள்

  1. முதலில் கேரட் மற்றும் பீன்ஸை தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு மாங்காயையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும்
  3. கேரட் பீன்ஸ் மற்றும் மாங்காயை அவித்து எடுத்து ஒரு துணியால் ஈரத்தை ஒற்றி எடுக்கவும்
  4. மசாலா வகைகள் வினிகர் மற்றும் உப்போடு வேக வைத்த காய்கறிகளை சேர்த்து பிரட்டவும்
  5. கடாயில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோல் நீக்கிய நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. இனி மசாலா சேர்த்த காய்கறி கலவையை சேர்த்து எஞ்சிய எண்ணையை ஊற்றவும்
  8. எலுமிச்சையை வெட்டி சாற்றைப் பிழிந்து ஊற்றவும்.
  9. இதனை குறைந்த தணலில் எண்ணெய் ஓரத்தில் பிரிந்து வரும் வரை வேக விடவும்
  10. நன்றாக ஆறியதும் சுத்தமான கண்ணாடி குடுவையில் போட்டு வைத்து தேவைக்கேற்ப சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்