வீடு / சமையல் குறிப்பு / சேமியா இட்லி

Photo of Vermicelli idly by Rachell Revathi Samuel at BetterButter
135
1
0.0(0)
0

சேமியா இட்லி

Nov-27-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சேமியா இட்லி செய்முறை பற்றி

சேமியாவில் செய்யப்படும் உடனடி இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/2கப்
  2. ரவை 1/3 கப்
  3. தயிர் 4 ஸ்பூன்
  4. எண்ணெய் 1 ஸ்பூன்
  5. கடுகு உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 1
  7. கறிவேப்பிலை சிறிது
  8. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  9. உப்பு தேவையான அளவு
  10. துருவிய பீட்ரூட் 1/4 கப்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து அதில் ரவையை நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்
  2. சேமியாவை வறுத்து எடுக்கவும்
  3. பாத்திரத்தில் வறுத்த ரவை மற்றும் வறுத்த சேமியாவை எடுத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் தயிர் சேர்க்கவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  6. கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  8. தாளித்ததை ரவை மற்றும் சேமியா உடன் சேர்க்கவும்
  9. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொண்டு அது 5 நிமிடம் அப்படியே வைக்கவும்
  11. இட்லி தட்டில் எண்ணெய் தடவி கொள்ளவும்
  12. துருவிய பீட்ரூட்டை எல்லா குழிகளிலும் வைக்கவும்
  13. கலந்து வைத்த இட்லி மாவை ஊற்றவும்
  14. இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி 10 நிமிடம் வேக விடவும்
  15. சுவையான சேமியா இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்