வீடு / சமையல் குறிப்பு / காய்கறி மினி போண்டா

Photo of Vegtable mini bonda by hajirasheed haroon at BetterButter
334
2
0.0(0)
0

காய்கறி மினி போண்டா

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி மினி போண்டா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் 5
  4. குடைமிளகாய் ஒன்று
  5. பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1கப்
  6. வெங்காயம் 4
  7. மல்லி இலை 1 பின்ச்
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  10. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. கான்பிளவர் மாவு 2 டேபிள்ஸ்பூன்
  14. மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
  15. கடலைமாவு 1 டீஸ்பூன்
  16. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கேரட் உருளைக்கிழங்கு இரண்டையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. குடைமிளகாய் வெங்காயம் பீன்ஸ் கோஸ் மல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காய்கறிகளை மசித்துச் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு கான்பிளவர் மாவு மைதா மாவு கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பிசைந்து வைத்துள்ள மாவை ஐந்து நிமிடம் ஊறவிடவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய போண்டாக்களாக எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சுவையான காய்கறி மினி போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்