வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை துவையல் (அடுப்பு தேவையில்லை)

Photo of Curry leaves thuvayal(no need to cook) by Krishnasamy Vidya Valli at BetterButter
258
3
0.0(0)
0

கருவேப்பிலை துவையல் (அடுப்பு தேவையில்லை)

Nov-28-2018
Krishnasamy Vidya Valli
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை துவையல் (அடுப்பு தேவையில்லை) செய்முறை பற்றி

எனக்கு ஊறுகாய் பிடிக்காது. அதனால் என் அம்மா தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த துவையல் செய்வார்கள்.அதுவும் நான் ரஸம் சாதம் சாப்பிடும்போதுதான் செய்வார்கள். தேங்காய் துருவல் எப்போதும் வீட்டில் இருக்கும். ஒரே நிமிடத்தில் என் அம்மா செய்து விடுவார்கள். ஆரோக்கியமான அந்த துவையல் ரெசிபி இதோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருவேப்பிலை கொழுந்து(இளம் கருவேப்பிலை) 1/4 கப்
  2. தேங்காய் துருவல் கால் கப்
  3. உப்பு 1/8 தேக்கரண்டி (விருப்பப்பட்டால் கூட்டிக்கொள்ளவும்)
  4. பச்சைமிளகாய்-1 அல்லது 2
  5. பெருங்காயம் 4 சிட்டிகை
  6. புளி ஒரு சிறிய துண்டு
  7. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர கொடுக்கப்பட்டவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. தேங்காய் எண்ணெய் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்