வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பொங்கல்

Photo of Karupatti pongal by Shoba Jaivin at BetterButter
335
2
0.0(0)
0

கருப்பட்டி பொங்கல்

Nov-30-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி பொங்கல் செய்முறை பற்றி

என் தங்கைக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் எங்களுக்கு சாப்பாடே இது தான்.வீடே மணக்கும்..கருப்பட்டி பெங்கலுக்கு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி 1 டம்ளர்
  2. பாசிப் பருப்பு முக்கால் டம்ளர்
  3. கருப்பட்டி தேவையான அளவு
  4. நெய் தேவையான அளவு
  5. ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்
  6. முந்திரி திராட்சை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் நெய் விட்டு அரிசி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்
  3. அதே நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும்
  4. வறுத்த அரிசி மற்றும் பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும்
  5. பொங்கல் நன்கு வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டிப் பாகில் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கெட்டியாக வந்ததும் முந்திரி திராட்சை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்