கருப்பட்டி சாயா | Palm jaggery tea in Tamil

எழுதியவர் Asiya Omar  |  30th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Palm jaggery tea by Asiya Omar at BetterButter
கருப்பட்டி சாயாAsiya Omar
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

0

0

கருப்பட்டி சாயா recipe

கருப்பட்டி சாயா தேவையான பொருட்கள் ( Ingredients to make Palm jaggery tea in Tamil )

 • கருப்பட்டி ஒரு சில்( சிறியது)
 • தேயிலை -1/2 -1 தேக்கரண்டி
 • இஞ்சி சிறிய துண்டு தட்டிக் கொள்ள
 • சோம்பு - 1 தேக்கரண்டி
 • புதினா காம்பு அல்லது இலைகள் - சிறிது.
 • பால் விரும்பினால் 200 மில்லி காய்ச்சி வைக்கவும்.
 • தண்ணீர் -1 லிட்டர்
 • தேவைப்பட்டால் வெந்நீர்

கருப்பட்டி சாயா செய்வது எப்படி | How to make Palm jaggery tea in Tamil

 1. முதலில் கருப்பட்டிச் சில்லை எடுத்து உடைத்தோ அல்லது சிறியதாக இருந்தால் அப்படியே போடலாம்
 2. ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் அளவு தண்ணீர் வைத்து கருப்பட்டி சில் போட்டு கொதிக்க விடவும்.நன்கு கரைய வேண்டும்.
 3. இஞ்சி தட்டி போடவும்.விரும்பினால் சோம்பு சேர்க்கவும்.சூப்பர் மணமாக இருக்கும்.
 4. புதினா சேர்த்தால் இன்னும் மணம் செமையாக இருக்கும்.
 5. அடுத்து தேயிலை சேர்த்து இரண்டு மூன்று கொதிவர வேண்டும்.
 6. அடுப்பை அணைக்கவும்.
 7. பின்பு மண்டியை வடிய வைக்க சிறிது நேரம் அகப்பை விடாமல் இருக்க வேண்டும்.
 8. அப்படியே மேலே இருக்கும் சாயாவை ஒரு கைப்பிடி தம்ளரில் விடவும்.
 9. மண்டியை கொட்டி விட வேண்டும்.
 10. சாயா இனித்தால் சேர்க்க வெந்நீர் தயாராக இருக்கட்டும்.பால் காய்ச்சி வைக்கவும்
 11. சாயாவை கப்பில் விட்டு அப்படியே விரும்பினால் சூடாக குடிக்கலாம்.
 12. இல்லையெனில் பால் சேர்த்தும் குடிக்கலாம்.மொத்த சாயாவில் பால் சேர்க்காமல் தேவைப்படுவோர் ஊற்றி குடிக்கலாம்.
 13. சுவையான கருப்பட்டி சாயா தயார்.

எனது டிப்:

மொத்தமான சூடான கருப்பட்டி சாயாவில் பால் சேர்த்தால் திரிந்துபோக வாய்ப்புண்டு,எனவே தேவைக்கு கப்பில் பால் சேர்க்கவும்.

Reviews for Palm jaggery tea in tamil (0)