வீடு / சமையல் குறிப்பு / முட்டை குழம்பு

Photo of Egg gravy by Fathima Beevi at BetterButter
410
1
0.0(0)
0

முட்டை குழம்பு

Dec-03-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை குழம்பு செய்முறை பற்றி

முட்டை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்த முட்டை-5
  2. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  3. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  4. பட்டை- ஒரு துண்டு
  5. ஏலக்காய்-3
  6. கிராம்பு-2
  7. மிளகு-5
  8. பச்சை மிளகாய்-2
  9. துருவிய இஞ்சி-1 டீஸ்பூன்
  10. பூண்டு பற்கள்-7- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  11. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  12. பெரிய வெங்காயம்-2
  13. தக்காளி-2
  14. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  15. மிளகாய் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  16. மல்லித் தூள்- 1  டேபிள் ஸ்பூன்
  17. புளி கரைசல்-1/4 கப்
  18. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  19. உப்பு- தேவையான அளவு
  20. கெட்டியான தேங்காய் பால்   - 1/2 கப்
  21. தண்ணியான தேங்காய் பால்-1/2 கப்

வழிமுறைகள்

  1. பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு பச்சை மிளகாய், கருலேப்பில்லை, துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  7. புளி கரைசல் மற்றும் தண்ணியான தேங்காய் பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
  8. சிறிது கொதி வந்ததும் கெட்டியானதேங்காய் பால் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  9. பின்பு வேகவைத்த முட்டைகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்