வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of ladies finger stir fry by Wahida Abdul Hameed at BetterButter
349
0
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Dec-04-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

எல்லோருக்கும் பிடித்த சுலபமான ஒரு சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் ½ கிலோ
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி
  5. கடுகு ஒரு தேக்கரண்டி
  6. சீரகம் ஒரு தேக்கரண்டி
  7. உளுந்து ஒரு தேக்கரண்டி
  8. கருவேப்பிலை ஒரு கொத்து
  9. பச்சை மிளகாய்-1
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. தண்ணீர் சிறிதளவு
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. தேங்காய் துருவல் ½ கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் உளுந்து கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் ட்ரான்ஸ்பரன்ட் ஆக வரும் வரை வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.
  4. வெண்டக்காய் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  5. தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.
  6. வெந்ததும் இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து விட்டு அடுப்பை ஆப் பண்ணவும்.
  7. சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்