வீடு / சமையல் குறிப்பு / எள்ளு மிளகாய் பொடி

Photo of Sesame milagai podi by Krishnasamy Vidya Valli at BetterButter
285
1
0.0(0)
0

எள்ளு மிளகாய் பொடி

Dec-06-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

எள்ளு மிளகாய் பொடி செய்முறை பற்றி

இட்லிக்கு தொட்டுக்கொள்ள எப்போதும் செய்யும் மிளகாய் பொடியிலிருந்து ஒரு மாற்று. அந்த மிளகாய் பொடி திரிக்க அதிக நேரம் ஆகும். ஆனால் எள்ளு மிளகாய் பொடி சீக்கிரம் செய்து விடலாம். அவசரத்திற்கு எள்ளோதரை கிளறவும் பயன்படுத்தலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கருப்பு மற்றும் வெள்ளை எள் சேர்த்து 1/8 கப்
  2. உருட்டு உளுந்து/தோலி உளுந்து கால் கப்
  3. மிளகாய்வற்றல் 6 முதல் 8
  4. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. வெல்லப் பொடி அரை தேக்கரண்டி
  7. மிளகாய் வற்றல், பெருங்காயம் வறுப்பதற்கு இரண்டு சொட்டுகள் எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் உளுந்தை வறுத்து கொள்ளவும்
  2. தனியே வைத்துவிட்டு எள்ளை வறுத்துக்கொள்ளவும்
  3. எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
  4. சிறிது ஆற வைத்து உப்பு வெல்லப்பொடி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. இட்லிக்கு தொட்டுக்கொள்ள பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்