வீடு / சமையல் குறிப்பு / கீரை குழம்பு

Photo of amaranthus green moong dal semi gravy by Wahida Abdul Hameed at BetterButter
517
0
0.0(0)
0

கீரை குழம்பு

Dec-08-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை குழம்பு செய்முறை பற்றி

ஆரோக்கியமான கீரை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை அல்லது சிறு கீரை 1 கட்டு
  2. சிறு பருப்பு 1 கப்
  3. பச்சை மிளகாய் 1
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  6. வெங்காயம் 1
  7. தக்காளி 1
  8. பூண்டு 8 பல்
  9. கருவேப்பிலை ஒரு கொத்து
  10. கடுகு ஒரு ஸ்பூன்
  11. சீரகம் ஒரு ஸ்பூன்
  12. உளுந்து ஒரு ஸ்பூன்
  13. உப்பு ருசிக்கேற்ப
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிறுகீரை அல்லது அரை கீரை ஆய்ந்து கழுவி தனியே எடுத்து வைக்கவும். சிறு பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின் தண்ணீரில் கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
  2. குக்கரில் கீரை, சிறுபருப்பு, நறுக்கிய வெங்காயம் (தாளிப்பதற்காக சிறிதளவு வெங்காயத்தை தனியே எடுத்து வைக்கவும்.) நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 3 விசில் விடவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும், கூடவே கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு கீரை கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்