Photo of Apple Rasam by Aishwarya Rangan at BetterButter
891
5
5.0(2)
0

Apple Rasam

Dec-09-2018
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/2 சிறிதாக நறுக்கிய ஆப்பிள்
  2. மிளகு 1 ஸ்பூன்
  3. சீரகம் 1 ஸ்பூன்
  4. பூண்டு பல் 5
  5. பெருங்காயம்
  6. சமையல் எண்ணை
  7. கடுகு 1/2 ஸ்பூன்
  8. புளி சிறிதளவு
  9. தக்காளி 1
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. சிவப்பு காய்ந்த மிளகாய் 1

வழிமுறைகள்

  1. ஆப்பிள் இரண்டாக வெட்டி பாதி ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்
  2. ஆப்பிள் தோலை நீக்கி விட்டு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  3. மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பூண்டு 5 சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த விழுது உடன் சிறிதாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  5. சிறிதளவு புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்
  6. புலி சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தக்காளியை சேர்த்து கொள்ளவும்
  7. ஒரு பானில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
  8. அரைத்து வைத்திருந்த ஆப்பிள் மற்றும் மிளகு சீரக விழுது எண்ணெயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  9. பச்சை வாசனை போன பிறகு புளி சாறு சேர்த்து ஒரு கொதி விடவும்
  10. ஆப்பிள் ரசம் தாளிக்க ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்
  11. சூடான பின் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும்
  12. தாளிப்பை ஆப்பிள் ரசத்தில் சேர்த்து பின்பு பரிமாறலாம்
  13. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான ரசத்தை உண்ணலாம் இப்போது சுவையான எளிமையான ஆப்பிள் ரசம் தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
கிரிஜா. ரங்கன்
Dec-11-2018
கிரிஜா. ரங்கன்   Dec-11-2018

இந்த டஷ்ஷை சமைத்தேன் மிகவும். சுவையாக இருந்தது இந்த ரசம் வைத்து வீட்டில் அனைவரும் ருசித்து சாப்பிட்டோம் நன்றி

avish anaa
Dec-10-2018
avish anaa   Dec-10-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்