வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு குழம்பு

Photo of Seppankilangu kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
668
0
0.0(0)
0

சேப்பங்கிழங்கு குழம்பு

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு குழம்பு செய்முறை பற்றி

பருப்பு இல்லாத இந்த குழம்பு வைத்த நேரத்தை விட சேப்பங்கிழங்கு குழம்பில் நன்கு ஊறி இரவில் சாப்பிடும் போது அலாதி சுவைதான். கிழங்கு சீசனில் அடிக்கடி அம்மா செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேப்பங்கிழங்கு 8 முதல் 10
  2. புளி பாதி எலுமிச்சை அளவு
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. குழம்பு பொடி ஒரு தேக்கரண்டி
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  7. காரப்பொடி கால் தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி
  10. கடுகு வெந்தயம் சீரகம் தலா அரை தேக்கரண்டி
  11. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  12. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  13. மிளகாய் வற்றல் ஒன்று

வழிமுறைகள்

  1. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து மஞ்சள் பொடி குழம்பு பொடி காரப்பொடி உப்பு சேர்த்து வதக்கி சேப்பங்கிழங்கு சேர்த்துக் கிளறவும்
  3. புளியைக் கரைத்து சேர்த்து வெல்லம் போட்டு கொதிக்க விடவும்
  4. கெட்டியானதும் இறக்கி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்