Photo of Liver Masala Gravy by Sumaiya shafi at BetterButter
336
0
0.0(0)
0

ஈரல் மசாலா

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈரல் மசாலா செய்முறை பற்றி

மட்டன் ஈரல் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டு ஈரல் 250கிராம்
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  4. பச்சைமிளகாய்-2
  5. பட்டை இரண்டு துண்டு
  6. ஏலக்காய்-2
  7. லவங்கம் 2
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  9. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  11. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  12. குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன்
  13. தேங்காய் அரைத்தது 1/2 கப்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஈரலை மஞ்சதூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதை தயிர் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
  5. பின் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
  6. எண்ணையில் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. பின் ஊற வைத்த ஈரலை அதனுடன் சேர்த்து குழம்பு மிளகாய் தூள் போட்டு கிளறவும்
  8. கடைசியில் அரைத்த தேங்காயை சிறிது தண்ணீர் கலந்து அதனுடன் சேர்த்து 3 விசில் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்