Photo of Mom's Gooseberry Combo by pavumidha arif at BetterButter
929
4
0.0(1)
0

Mom's Gooseberry Combo

Dec-11-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெல்லி வத்தல்::
  2. நெல்லிக்காய் 10
  3. உப்பு பின்ச்
  4. நெல்லிக்காய் சுகர் கேண்டி:::
  5. நெல்லிக்காய் 10
  6. சக்கரை 1/2 கப்
  7. நெல்லிக்காய் வெல்லம் கேண்டி:::
  8. நெல்லிக்காய் 10
  9. வெல்லம் 1/2 + 1/4 கப்
  10. பனகற்கண்டு 3 டீஸ்பூன்
  11. நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ்:::
  12. இஞ்சி சாறு 1/2 டீஸ்பூன்
  13. சக்கரை 1 டீஸ்பூன்
  14. இஞ்சி சாறு சிறிது
  15. நெல்லி மருந்து::
  16. நெல்லி சாறு 1 கப்
  17. வெல்லம் 1/2 கப்
  18. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  19. மிளகு தூள் பின்ச்

வழிமுறைகள்

  1. நெல்லி வத்தல் செய்ய:::
  2. நெல்லிக்காய் நன்றாக கழுவி கொட்டைகளை நீக்கி விடவும்
  3. பின்னர் சிறிது உப்பு சேர்த்து அல்லது உப்பு இல்லாமல் சிறிதாக நறுக்கி வெயிலில் 5 நாள் காய விடவும்.
  4. பின்னர் நிழலில் காய விடவும்.சத்தான நெல்லிக்காய் வத்தல் தயார்
  5. இதனை மிக்ஸியில் 1 டீஸ்பூன் சேர்த்து மோருடன் அருந்தலாம். வத்தலாகவும் நேரடியாக சாப்பிடலாம்.
  6. நெல்லிக்காய் வெல்ல கேண்டி::::
  7. நெல்லிக்காயை இட்லி பாத்திரத்தில் 5-10 நிமிடம் வேக விடவும்.
  8. பின்னர் கொட்டைகளை நீக்கி நறுக்கி போடவும்.பின்னர் நயமான வெல்லத்தை சேர்த்து கொள்ளவும். அல்லது வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.
  9. இதனை இரவு முழுவதும் ஊற விடவும். பின்னர் இதனை தட்டில் ஊறவைத்து நெல்லிகாயை போட்டு வெயிலில் காய விடவும்
  10. பின்னர் இரண்டாவது நாள் மாலையில் மீண்டும் அதே வெல்ல தண்ணீரில் இரவு முழுவதும் ஊற விடவும்.
  11. பின்னர் மறு நாள் காய விடவும்.
  12. பின்னர் மீண்டும் ஊறவைத்து காய விடவும்.
  13. நன்றாக காய்ந்த பின்னர் இதில் பனகற்கண்டு அரைத்து இதனுடன் கிளறி விடவும்
  14. சுவையான நெல்லிக்காய் வெல்ல கேண்டி தயார்.இதனை டப்பாவில் அடைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
  15. நெல்லிக்காய் லெமன் ஜூஸ்:::::
  16. நெல்லிக்காய் நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். இதனுடன் சிறிது இஞ்சி சாறு விடவும்
  17. பின்னர் சிறிது சக்கரை சேர்த்து பரிமாறவும். இதனுடன் புதினா சிறிதளவு சேர்த்தாலும் சுவையாக இருக்கும்
  18. நெல்லி மருந்து:::
  19. நெல்லி ஊற வைத்த வெல்ல தண்ணீர் எடுத்து கொள்ளவும்
  20. இது மிகவும் சத்து நிறைந்த தண்ணீர்.
  21. இதனை அடுப்பில் வைத்து சிறிது மிளகு பொடி,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  22. நன்றாக கிளறிய பின்னர் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
  23. நெல்லிக்காய் சுகர் கேண்டி:::
  24. நெல்லிக்காய் அடுப்பில் 5-10 நிமிடம் வேக விடவும்
  25. நெல்லிக்காய் வெட்டி பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்
  26. இதனுடன் சக்கரை சேர்த்து கொள்ளவும்
  27. இதனை மூடி 3 நாட்கள் ஊற விடவும். பின்னர் வெயிலில் காயவிடவும்
  28. நன்றாக காய்ந்த பின்னர் இதனுடன் அரைத்த சக்கரை சேர்த்து கிளறினால் கேண்டி தயார்
  29. சுவையான நெல்லிக்காய் சுகர் கேண்டி தயார்
  30. சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயில் வத்தல்,நெல்லிக்காய் சுகர் கேண்டி, நெல்லிக்காய் வெல்லம் கேண்டி, நெல்லி மருந்து, நெல்லிக்காய் இஞ்சி ஜூஸ் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Dec-12-2018
Maharasi Devendiran   Dec-12-2018

Super

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்