வீடு / சமையல் குறிப்பு / புரதச் சத்து நிறைந்த சத்து மாவு மற்றும் கஞ்சி

Photo of Protien rich health mix powder by Rabia Hamnah at BetterButter
465
0
0.0(0)
0

புரதச் சத்து நிறைந்த சத்து மாவு மற்றும் கஞ்சி

Dec-18-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

புரதச் சத்து நிறைந்த சத்து மாவு மற்றும் கஞ்சி செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை சாப்பிடலாம் உடம்புக்கு சத்து நிறைந்த பாலமாக அமையும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பாதாம் பருப்பு -1 கப்
  2. முந்திரிப் பருப்பு -1கப்
  3. பொட்டுக்கடலை -1கப்
  4. வேர்க்கடலை -1கப்
  5. பாசிப்பருப்பு -1 கப்
  6. கோதுமை மாவு -1 கப்
  7. கடலை மாவு -1 கப்
  8. நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு -1கப்
  9. ஏலக்காய் -4

வழிமுறைகள்

  1. பாதாம்பருப்பை காய்ந்த பாத்திரத்தில் போட்டு முதலில் வறுக்கவும்
  2. குறைந்த தணலில் வைத்து மனம் வர வறுக்கவும்
  3. பாதாமை போன்று முந்திரியை வறுக்கவும்
  4. இப்படி தனித்தனியாக பருப்பு வகைகளை வறுத்து ஒரு தட்டில் வைக்கவும்
  5. கோதுமை மாவு கடலை மாவு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மணம் வர வறுத்து எடுக்கவும்
  6. நாட்டு சக்கரை வறுக்கத் தேவையில்லை
  7. வறுத்த பருப்புகளை நன்றாக ஆறவிடவும்
  8. பின்பு மிக்ஸி ஜாரில் பருப்பு வகைகளை சேர்த்து கோதுமை மாவு கடலை மாவை சேர்க்கவும்
  9. இதனுடன் நான்கு ஏலக்காய் சேர்க்கவும்
  10. பல்ஸ் மோடில் வைத்து விட்டு விட்டு அரைக்கவும்
  11. சூடு ஏற விடாமல் விட்டு விட்டு அரைத்தல் நலம்
  12. மாவு நன்கு அறைந்ததும் கடைசியாக நாட்டு சர்க்கரையை சேர்த்து ஒரு சுற்று போட்டு எடுக்கவும்
  13. பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும் ஆறியபின் அதை ஏர் டைட் டப்பாவில் சேர்த்து வைக்கவும்
  14. கஞ்சி காய்ச்சும் முறை: ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி விழாமல் கலக்கவும்
  15. பின்பு அடுப்பில் ஏற்றி குறைந்த தணலில் கிண்டிக் கொண்டே இருக்கவும்
  16. கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டம்ளர் பாலை சேர்த்து 5 நிமிடம் வைத்து எடுத்து தேவைப்பட்டால் சக்கரை சேர்த்து பரிமாறலாம்
  17. சிறிய குழந்தைகள் என்றால் ஒரு ஸ்பூன் மாவு போதுமானது பெரியவர்கள் என்றால் இரண்டு மூன்று ஸ்பூன் போதுமானது
  18. காலை உணவுக்கு பதில் இதை ஒரு டம்ளர் குடித்தால் உடம்புக்கு அவ்வளவு சத்து நிறைந்த பானம் ஆக அமையும் புரத சத்து அதிகமிருப்பதால் பசி ஏற்படாது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்