வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு பிரியாணி

Photo of Horse gram biryani by Umamaheswari Chellamuthu at BetterButter
1269
1
0.0(0)
0

கொள்ளு பிரியாணி

Dec-19-2018
Umamaheswari Chellamuthu
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு பிரியாணி செய்முறை பற்றி

ஆந்திரா மாநிலத்தில் இந்த கொள்ளு பிரியாணி மிக பிரசித்தம் .இதை அங்கு "உலவச்சாறு பிரியாணி" என்று சொல்கின்றனர். உலவச்சாறு என்பது கொள்ளு வேக வைத்த நீர் . நான் இந்த பிரியாணியில் வெந்த கொள்ளையும் வீணாக்காமல் அரைத்து சேர்த்திருக்கிறேன் . செய்து பாருங்கள் .சுவை நிச்சயம் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. எலும்புடன் கூடிய மட்டன் - 1/4 கிலோ
  2. கொள்ளு - 50 கிராம்
  3. பாஸ்மதி அரிசி - 1/4 கிலோ
  4. சின்ன வெங்காயம் - 15
  5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  6. பிரியாணி இலை -2
  7. ஏலக்காய் -10
  8. பட்டை -3 ( 1/2 இன்ச்)
  9. கிராம்பு -10
  10. மராட்டி மொக்கு -4
  11. ஷாஜீரா(சோம்பு போன்றது) -1 டீஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
  13. சிவப்பு மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  14. கெட்டியாக கரைத்த புளி தண்ணீர்- 200மிலி
  15. கொத்தமல்லி ,புதினா- 1கைப்பிடி
  16. கரிவேப்பிலை - 1 கொத்து
  17. பச்சை மிளகாய் -4
  18. நல்லெண்ணெய்-50மிலி
  19. நெய்-20மிலி
  20. வெண்ணெய்-2ஸ்பூன்(தேவைப்பட்டால்)

வழிமுறைகள்

  1. கொள்ளை 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்
  2. குக்கரில் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரை லிட்டர் நீர் ஊற்றி 6-8விசில் வைத்து இறக்கவும்
  3. கொள்ளு வெந்த நீரை தனியை வடித்து வைக்கவும்
  4. வெந்த கொள்ளை மிக்ஸியில் இட்டு மைய அரைத்து கொள்ளவும் (கொள்ளு வெந்த நீர் சேர்த்து அரைத்து கொள்ளலாம் )
  5. அரை மணி நேரம் முன்பு பாசுமதி அரிசியை கழுவி ஊற வைக்கவும்
  6. மட்டனை கழுவி சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். (தண்ணீருக்கு பதில் கொள்ளு வேக வைத்த நீரை உபயோகிக்கலாம்
  7. ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு நீர் சேர்த்து அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் பாதி அளவு சேர்த்து அரை ஸ்பூன் ஷாஜீரா ,பிரியாணி இலை 1 சேர்த்து நீரை கொதிக்க விடவும்
  8. கொதித்ததும் அதில் ஊற வைத்த அரிசி போட்டு முக்கால் பதத்திற்க்கு வேக வைத்து வடித்து உலர விடவும்
  9. அடிகனமான பிரியாணி பாத்திரத்தில் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மீதி உள்ள பட்டை,கிராம்பு,ஏலக்காய்,ஷாஜீரா,பிரியாணி இலை,மராட்டி மொக்கு இவற்றை போட்டு பொறிய விடவும்
  10. அரைத்த சின்னவெங்காய விழுது,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .
  11. பச்சை மிளகாய் (முழுதாய்),கறிவேப்பிலை சேர்க்கவும் (கறிவேப்பிலை தவிர்க்க வேண்டாம்)
  12. நன்கு வதங்கியதும் அரைத்த கொள்ளு விழுது சேர்க்கவும் .
  13. உடன் கொள்ளு வேக வைத்த நீர் சேர்த்து , மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கெட்டியாக கிளறவும்
  14. கெட்டியானதும் அதில் புளி தண்ணீரை சேர்த்து கிளறி , உடன் வேக வைத்த மட்டன் சேர்த்து கெட்டியான குழம்பு பதத்திற்க்கு கொண்டு வரவும்
  15. 15 நிமிடங்கள் ஆகலாம் .அடுப்பை குறைந்ந தீயில் வைத்து கிளறி கொடுக்கவும்
  16. கொள்ளு மட்டன் மசாலா கெட்டியாக தயார் ஆனதும் அதன் மேல் முக்கால் பதம் வெந்த பாசுமதி அரிசி சேர்த்து ஒரு சேர பரப்பி விடவும்
  17. அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி ,புதினா தூவி , நெய் /உருக்கிய வெண்ணெய் இரு ஸ்பூன் ஊற்றி கனமான மூடியிட்டு 15நிமிடம் தம்மில் வைக்கவும் .
  18. 15 நிமிடங்களில் வித்தியாசமான சுவை கொண்ட கொள்ளு உலவச்சாறு பிரியாணி தயார்
  19. தம்மில் இருந்து இறக்கி ஒரு சேர நன்றாக கலந்து தயிர் பச்சடியுடன் பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்