வீடு / சமையல் குறிப்பு / தாபா ஸ்டைல் டால் மக்கானி

Photo of Dhaba style Dal Makhani by Jayasakthi Ekambaram at BetterButter
474
1
0.0(0)
0

தாபா ஸ்டைல் டால் மக்கானி

Dec-20-2018
Jayasakthi Ekambaram
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தாபா ஸ்டைல் டால் மக்கானி செய்முறை பற்றி

கறுப்பு முழு உளுந்தும் ராஜ்மாவும் சேர்த்து செய்யும் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கறுப்பு முழு உளுந்து 100 கிராம்
  2. ராஜ்மா 25 கிராம்
  3. மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன்
  4. கல் உப்பு ஒரு ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  6. பிரிஞ்சி இலை ஒன்று
  7. சீரகம் அரை ஸ்பூன்
  8. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  10. சமையல் எண்ணெய் 4 ஸ்பூன்
  11. வெங்காயம் ஒன்று
  12. தக்காளி-2
  13. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  14. ஃப்ரஷ் க்ரீம் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருப்பு உளுந்தையும் ராஜ்மாவையும் கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்
  2. 8 மணி நேரத்திற்கு பிறகு 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை சீரகம் தாளிக்கவும்
  4. பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்
  5. இரண்டு தக்காளியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து அதையும் சேர்த்து வதக்கவும்
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  7. மிளகாய்த்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் மீதி உப்பு சேர்த்து வதக்கவும்
  8. வேக வைத்த உளுந்து ராஜ்மாவை தண்ணீரோடு இதில் சேர்க்கவும்
  9. மூடி வைத்து பத்து நிமிடங்கள் சமைக்கவும்
  10. கெட்டி பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை ஆப் செய்யவும்
  11. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி ஃப்ரஷ் கிரீமை மேலே ஊற்றவும்
  12. சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்