வீடு / சமையல் குறிப்பு / பொட்டுக்கடலை முறுக்கு

Photo of Roasted Gram Dal Murukku by Priya Tharshini at BetterButter
442
0
0.0(0)
0

பொட்டுக்கடலை முறுக்கு

Dec-24-2018
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பொட்டுக்கடலை முறுக்கு செய்முறை பற்றி

பொட்டுக்கடலை மாவுடன் அரிசி மாவு சேர்த்து செய்யப்படும் கரகரப்பான முருக்கு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு / இடியாப்ப மாவு - 2 கப்
  2. பொட்டுக்கடலை - 1/2 கப்
  3. வெண்ணை - 3 மேசைக்கரண்டி
  4. சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
  5. உப்பு - தேவைக்கு
  6. எண்ணெய் - தேவைக்கு
  7. தண்ணீர் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பவுடராக அறைத்துக் கொள்ளவும்.
  2. சல்லடையில் அரிசி மாவு , அரைத்த பொட்டுக்கடலை மாவு மற்றும் சீரகதூள் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
  3. சலித்த மாவுடன் உப்பு , வெண்ணை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  4. தேவையான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  5. இந்த அச்சை முறுக்கு அச்சில் போட்டு சுத்தி எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
  6. முறுக்கு மாவை அச்சில் நிறப்பிக் கொள்ளவும்.
  7. முறுக்கு களை பிழிந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
  8. வாணலியில் எண்ணெய் சூடானதும் பிழிந்த முறுக்கு களை போடவும்.
  9. நன்கு பொறிந்து ஓசை அடங்கும் வரை வேகவிடவும்.
  10. முறுக்கு தயார் ஆனதும் வடித்து எடுக்கவும்.
  11. பொட்டுக்கடலை முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்