அவரைக்காய் பருப்பு உசிலி | Avaraikai paruppu osili in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  25th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Avaraikai paruppu osili by Krishnasamy Vidya Valli at BetterButter
அவரைக்காய் பருப்பு உசிலிKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

அவரைக்காய் பருப்பு உசிலி recipe

அவரைக்காய் பருப்பு உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Avaraikai paruppu osili in Tamil )

  • நறுக்கிய அவரைக்காய் ஒன்றரை கப்
  • உப்பு அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  • தேங்காய் துருவல் 1/8 கப்
  • துவரம்பருப்பு கடலைப்பருப்பு தலா 1/8 கப்
  • பச்சை மிளகாய் ஒன்று
  • மிளகாய் வத்தல் 1
  • உப்பு கால் தேக்கரண்டி
  • பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  • எண்ணெய் மூன்று தேக்கரண்டி
  • கருவேப்பிலை சிறிது
  • தாளிக்க
  • எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  • கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி

அவரைக்காய் பருப்பு உசிலி செய்வது எப்படி | How to make Avaraikai paruppu osili in Tamil

  1. அவரைக்காயை நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குழையாமல் வேக வைத்து எடுக்கவும்
  2. பருப்பு பச்சை மிளகாய் மிளகாய் வத்தலை அரைமணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. பருப்பு நன்றாக உதிர் உதிராக வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து அவரைக்காய் சேர்த்து வதக்கவும்
  6. அவரைக்காய் வதங்கியதும் ஏற்கனவே செய்து வைத்த பருப்பு உசிலி சேர்த்து கிளறி இறக்கவும்
  7. சூடாகப் பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் வெங்காயம் வதக்கி சேர்க்கவும்.

Reviews for Avaraikai paruppu osili in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.